கொடைக்கானல்: கொடைக்கானல் கிளப்பில் இரண்டாவது ஆண்டாக மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நேற்று துவங்கியது. கொடைக்கானல் கிளப் துவங்கி, 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை யடுத்து, சென்ற ஆண்டு மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது. இந்தாண்டும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டிநேற்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர்களுக்கான பிரிவுகளில் பங்கேற்க 200 பேர், பதிவு செய்திருந்தனர். இதில், 75 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போட்டியை தலைவர் அருண் நாகராஜன், செயலர் ராகேஷ் மிட்டல் துவக்கி வைத்தனர்.
இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் மினுஆவேரி, நடராஜன் கூறியதாவது: பல இடங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதலிடம் பெறுபவருக்கு பிரான்சில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்டல் சுழற்கோப்பையும், சீப்பர் பேனா, வாட்ச் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடம் பெறுபவருக்கு சீப்பர் பேனா, கட்டர் வழங்கப்படும். இந்த பரிசு, ஒற்றையர் மற்றும் இரட்டையார் பிரிவுகளுக்கும் உள்ளது. இன்று (ஜன., 20) இறுதி போட்டி நடக்கிறது. இந்த போட்டிகளை தொடர்ந்து நடத்துவோம், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.