மும்பை: மும்பையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், கடந்த, 15ம் தேதி பிற்பகலில், வகுப்புகள் முடிந்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜூகு கடற்கரை பகுதிக்கு பஸ் சென்ற போது, பிற மாணவர்கள் எல்லாம் இறங்கி சென்று விட, நான்கு வயது பெண் குழந்தை மட்டும் பஸ்சில் இருந்தது. அப்போது குழந்தையை, பஸ்சின் கண்டக்டர், ரமேஷ் ராஜ்புத், 35, பலாத்காரம் செய்துள்ளார். இதை, அதே பஸ்சிலிருந்த பள்ளியின் ஆயா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் இதுபற்றி அவர், குழந்தையின் தந்தையிடம் தெரிவித்தார். உடன், போலீசில் புகார் செய்யப்பட்டு, பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால், "பஸ்சில் குழந்தையை கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அதனிடம் சில்மிஷம் மட்டுமே செய்துள்ளார்' என, மும்பை போலீஸ் கமிஷனர் சத்தியபால்சிங் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.