Advertisement
அத்வானி பயணப் பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு : 3 பேருக்கு பிடிவாரன்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:12 IST

மதுரை: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை செல்லவிருந்த பயணப்பாதையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தரைப்பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில், தலைமறைவாக உள்ள பக்ருதீன் அலி அகமது உட்பட 3 பேருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

அத்வானி 2011 அக்., 28 ல் ரதயாத்திரை செல்ல திட்டமிட்டிருந்த பயணப் பாதையில், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்துல்லா (எ) அப்துல் ரகுமான், இஸ்மத், ஹக்கீம் (எ) கருவா ஹக்கீமை போலீசார் கைது செய்தனர். மதுரை முனிச்சாலை பக்ருதீன் அலி அகமது (எ) போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், தென்காசி முகமது ஹனீபா (எ) நாகூர் ஹனீபா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமங்கலம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பக்ருதீன் அலி அகமது, பிலால் மாலிக், முகமது ஹனீபா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை, திருமங்கலம் கோர்ட் பிறப்பித்துள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (6)
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-201315:49:13 IST Report Abuse
Swaminathan Nath நம் சுசில் குமார் ஷிண்டவிற்கு, இது தெரியவில்லை, தீவிரவாதம் யார் செய்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ??????? .
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
tamilaa thamila - chennai,இந்தியா
20-ஜன-201313:37:19 IST Report Abuse
tamilaa thamila பொய் வழக்கு. கடவுள் பார்த்து கொள்வார்
Rate this:
6 members
0 members
2 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-ஜன-201309:58:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி கேஸ் போகும் ஸ்பீடைப் பார்த்தால், இந்த நூற்றாண்டிலேயே முடிந்து விடும் என்ற சந்தோஷம் எனக்கு வந்து விட்டது..
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
21-ஜன-201315:45:30 IST Report Abuse
Guruசரியாக சொன்னிர்கள் நண்பரே விருமாண்டி..., 1.5 வருஷம் கழித்து பிடிவாரன்ட் அப்போ எப்போ கைது, விசாரணை, தண்டனை... நீங்க சொன்னாமாதிரி இந்த நூற்றாண்டில் முடித்திடும்...
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
20-ஜன-201307:00:02 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் பல மோடிகள்தேவை
Rate this:
7 members
0 members
9 members
Share this comment
Prabu.KTK - Coimbatore,இந்தியா
20-ஜன-201316:05:09 IST Report Abuse
Prabu.KTKசூப்பர் கமெண்ட் ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.