உத்தமபாளையம்: தேனி, உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையில் சுவர் ஏறிக் குதித்து கைதி தப்பினார். தகவலை மறைக்காமல், போலீசில் புகார் செய்ததால் சிறை அலுவலர்களும் தப்பினர். கம்பம் அருகே கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் அக்பர்அலி, 23. சில தினங்களுக்கு முன், அடிதடி பிரச்னையில், போலீசார் இவரை கைது செய்து, உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். நேற்று மதியம் 12 மணிக்கு, கைதிகள் உணவு அருந்தினர். சமையல் அறை அருகில், அக்பர்அலி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென, அருகில் இருந்த 12 அடி உயர சுற்றுச் சுவரில் ஏறி தப்பி ஓடினார். மேற்பார்வையில் இருந்த சிறை அலுவலர்களும், சிறைக்கு வெளியே வந்து அக்பர் அலியை தேடினர்; அவர் சிக்கவில்லை. காம்பவுண்டு சுவருக்கு பின்னால், போலீஸ் ஸ்டேஷன் இருந்தும், கைதி தப்பியதால் சிறை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
"சுதாரித்த' சிறை அலுவலர்கள்: பல மணிநேரம் தேடியும் அக்பர்அலி கிடைக்காததால், சிறை அலுவலர்கள் கலக்கமடைந்தனர். நேற்று மாலை, போலீசில் புகார் செய்தனர். கடந்த ஆண்டு இதே சிறையில் இருந்து, கொலைக் கைதி ஒருவர் தப்பினார். அப்போதைய சிறை அலுவலர்கள் இத்தகவலை மேலிடத்திற்கு தெரிவிக்காமல் மறைத்து, இரண்டு நாட்கள்
வரை தேடினர். தகவல் "லீக்' ஆனதால், அலுவலர்கள் "கூண்டோடு' மாற்றப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.