பழநி: பழநி கோயில் தேவஸ்தான முடிகாணிக்கை நிலையங்களில், முடி இறக்கும் பக்தர்களிடம் 10 ரூபாய் கட்டணத்துடன், கூடுதலாக 100 ரூபாய் வசூலிக்கின்றனர். பழநி கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரை வருகின்றனர். இவர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக, தேவஸ்தானம் சார்பில் சண்முகநதி, சரவணப்பொய்கை, பூங்காரோடு ரவுண்டானா ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. "முடிகாணிக்கைக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்' என, தேவஸ்தானம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. பக்தர்களிடம், 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது. இதுதவிர, "சம்பளம் குறைவு' என்ற காரணம் கூறி, 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பக்தர்கள் புகார் தெரிவித்தாலும், "அவர்களுக்கு சம்பளம் குறைவு. அதனால் தான் பணம் கேட்கின்றனர்', என, அலுவலர்கள் சமாதானம் செய்து அனுப்புகின்றனர். இதை தேவஸ்தான நிர்வாகம் கண்டும் காணமால் உள்ளது. ஆண்டுக்கு பலகோடி ரூபாய் வருமானம் உள்ள பழநியில், திருமலை திருப்பதி போல, இலவசமாக முடிகாணிக்கை செலுத்த வசதி செய்து தரவேண்டும்.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் , ""பக்தர்களிடம் முடிகாணிக்கைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தவறு தான். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.