Advertisement
பள்ளி பருவத்தில் ஆளுமை திறன் வளர்க்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:16 IST

ராமநாதபுரம்: பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் ஆளுமை திறனை அதிகரிக்க, தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களின் தனித்திறனை வளர்க்க, ஆசிரியர்கள் சிறப்பு
கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம், உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்தல் முறையை பின்பற்றுகின்றனர். இதற்காக ஆசிரியர்கள், குழு விவாதம் நடத்தி மாணவர்களிடம் நடனம், இசை, கதை, பாடம், கவிதை, ஓவியம், பேச்சு, கட்டுரை என, பலவகை தலைப்புகளை வழங்குகின்றனர். இதில், மாணவர் எந்த தலைப்பை எடுக்க விரும்புகிறார், என்பதை கண்டறிந்து அவரது
எண்ணத்தின் அடிப்படையில், அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஆளுமை திறனை வளர்க்க, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க ஊக்கப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு முறையில், குழந்தைகளின் உள்ளார்ந்த திறனை வெளி கொணர்தல் முக்கியம். இதில் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொன்றில் சிறப்பு பெற்றிருப்பர். இதை கண்டறிந்து வெளிகொண்டு வந்து, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவரிடமும் ஆளுமை திறன் வளர வாய்ப்புள்ளது. இதற்காக அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.