ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பனங்கிழங்கு அறுவடை முடிந்த நிலையில், இதன் கொட்டைகள், சுண்ணாம்பு காளவாசல் மற்றும் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக "டன்' கணக்கில், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பனைமரங்கள் உள்ளன. இதில் இருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலை தொப்பி உள்ளிட்ட உபபொருள் தயாரிப்பு பிரபலம் அடைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடை காலங்களில் இத்தொழில் சூடு பிடிப்பது வழக்கம். இதற்கிடையில், "சீசன்' தொழிலாக பனங்கிழங்கு அறுவடையும் களை கட்டி வருகிறது. தற்போது, பல லட்சம் பனங் கொட்டைகள் பல்வேறு தேவைகளுக்காக "டன்' கணக்கில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ரெகுநாதபுரம், விவசாயி நாகநாத சேதுபதி கூறியதாவது: பொங்கலையொட்டி, பனங்கிழங்கு அறுவடைக்கு பின் பனங்கொட்டைகள் சேமிக்கப்பட்டு தேனி, திண்டுக்கல், தாராபுரம், கம்பம் உள்ளிட்ட பகுதி செங்கல் சூளை மற்றும் சுண்ணாம்பு காளவாசலுக்கு அனுப்பப்படுகின்றன. பனங்கொட்டை நீண்ட நேரம் எரியும் தன்மை உடையது. இதன் சிறப்பிற்காக, வெளிமாவட்ட வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு டன் 1,800 ரூபாய் வரை விலைபோகிறது. ராமநாதபுரம் அதன் சுற்றுப்புற கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகளிடம் பனங்கொட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்கிறோம். ஒரு டன் கருவேல விறகு 2,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் பனங்கொட்டைகளுக்கு தற்போது "கிராக்கி' அதிகம். இது ஓரிரு மாதங்கள் வரை நீடிக்கும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.