பீஜிங்:வெளிநாட்டைச் சேர்ந்த, திறமை வாய்ந்தவர்களுக்கு, சீன அரசு, ஐந்தாண்டு கால விசா வழங்க, முடிவு செய்துள்ளது.சீனாவில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 5.5 லட்சம் பேர், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஓராண்டு விசா வழங்கப்படுகிறது. இவற்றை ஆண்டுதோறும்புதுப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றி, திறமையானவர்களுக்கு, ஓராண்டு விசாவுக்கு பதிலாக, ஐந்தாண்டு விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு விவகாரத் துறை இயக்குனர் ஜாங்க் ஜியாங்கியோ கூறியதாவது:சீனாவில் தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும், ஓராண்டு கால விசாவுக்குப் பதிலாக, ஐந்தாண்டு கால விசா வழங்குவது குறித்து, ஐந்து அமைச்சர்களை கொண்ட, குழு ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளது. இதை அடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்த, திறமையானவர்களுக்கு, சீனாவில் பணியாற்ற, ஐந்தாண்டு கால விசா விரைவில் வழங்கப்படும்.தற்போது சீனாவில் உள்ள, 5.5 லட்சம் வெளிநாட்டவர்களில், ஏராளமானவர்கள், விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.மேலும், பல்நோக்கு விசா வழங்குவது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.