பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் உற்பத்தியாகும் நெல், தமிழகத்தின், ஐ.ஆர்., 20 ரகத்தை போல மோட்டாவாக உள்ளதால், தமிழக மக்கள் அதிகம் விரும்பும் சன்னரக அரிசிக்காக, ஒடிசா மாநிலத்தில், தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தென் மாநிலங்கள், கடந்த ஓராண்டுக்கு மேலாக மழையின்றி வறட்சியில் சிக்கியுள்ளது. உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. தமிழக டெல்டா மாவட்டத்தில், 20 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஐந்து லட்சம் டன் கூட நெல் உற்பத்தியாகவில்லை.
தமிழக அரசும், தமிழக வியாபாரிகளும், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்தனர். வடமாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகம் வந்துள்ள நெல் மூலம் கிடைக்கும் அரசி, தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள, ஐ.ஆர்.,20 ரக (மோட்டா) அரிசி போல் உள்ளது.
தமிழக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும், சன்னரகமான, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி, வெள்ளை பொன்னி, ராஜபோகம், ஆற்காடு கிச்சடி, ஆத்தூர் ஜீரக சம்பா போன்ற நெல், பல வடமாநிலங்களில் இல்லை. சரளா, சில்க்கி சேர்டெக்ஸ், 36ம் நெம்பர் ஆகியவை அனைத்தும் மோட்டா ரகம். அரசு வழங்கும் விலையில்லா அரிசியை போலவும், ஐ.ஆர்., 20 ரகத்தை போன்றது. தவிர, தமிழக மோட்டா ரக அரிசி போல சுவையின்றி, சலசலவென உள்ளது. தமிழக மக்கள் விரும்பும், ராஜபோகம் அரிசிக்கான நெல், இரண்டாண்டாக தமிழகத்தில் அதிகம் உற்பத்தி செய்யவில்லை. பி.பி.டி., பொன்னி அரிசி (பழையது), ராஜபோகம் அரிசியாக விற்பனை செய்யப்படுகிறது. தவிர, சன்னரக அரிசி, கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் இருந்து வரும் டீலக்ஸ் பொன்னி, ஆப் ஸ்டீம் அரிசியை மட்டுமே நம்பியே சந்தைகள் உள்ளன. சன்னரக அரிசிக்கான நெல்லை, ஒடிசா மாநிலத்தில் உற்பத்தி செய்துள்ளனர். ஓரிரு வாரங்களில் அங்கு அறுவடை நடைபெறவுள்ளதால், தமிழக வியாபாரிகள், ஒடிசாவில் முகாமிட்டுள்ளனர். அறுவடை முடிந்ததும், ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்யவுள்ளனர்.
இவ்வகை நெல் அரவைக்கு வந்து, அரிசியாக விற்பனைக்கு வந்தால் மட்டுமே, கர்நாடகாவில் இருந்து வரும், சன்னரக அரிசியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.