Advertisement
துணை தலைவர் ராகுல் ! காங்கிரசில் நம்பர்-2 பதவி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:18 IST

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், "கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்' என, பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தியதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக, நேற்று இரவு, அவர் நியமிக்கப்பட்டார்.


அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது தொடர்பாக, "சிந்தன் ஷிவிர்' என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற, சிந்தனை கூட்டம், இரண்டு நாட்களாக, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்தது.


இதில், பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, பொதுச் செயலர் ராகுல் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட, 347 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.




நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், "உட்கட்சி மோதல்களை தவிர்த்து விட்டு, ஒற்றுமையாக செயல்பட்டால் தான், அடுத்த லோக்சபா தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும்' என, மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.இரண்டாவது நாளான நேற்று, கட்சியின் பொதுச் செயலர் ராகுல் தான், முக்கிய விஷயமாக முன் நிறுத்தப்பட்டார். கட்சியில் உள்ள, அவரது ஆதரவாளர்கள், ஜோதிராதித்யா சிந்தியா, ராஜிவ் சுக்லா, மணி சங்கர் அய்யர், ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா உள்ளிட்ட பலரும், "ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அடுத்த தேர்தலில், அவரையே, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.




பிரதமர் வேட்பாளராக்கவும் வலியுறுத்தல் : ஜிதின் பிரசாதா பேசியதாவது:அடுத்த லோக்சபா தேர்தலில், இளைஞர்களின் பங்கு முக்கியமானது. அதிக அளவில், இளைஞர்களை, கட்சிப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே, வெற்றியை எட்டிப் பிடிக்க முடியும். அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, கட்சியின் பிரதமர் வேட்பாளராக, ராகுலை அறிவிக்க வேண்டும்; அதற்கு, இது தான், சரியான நேரம். இவ்வாறு ஜிதின் பிரசாதா பேசினார். காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, வீரப்ப மொய்லி பேசியதாவது: ராகுல், ஏற்கனவே தலைவர் தான். அதில், எந்த சந்தேகமும் இல்லை. நமக்கு நிலையான தலைவர்கள் இருப்பது, பெருமையான விஷயம்.


காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, எந்த காலத்திலுமே, கட்சியின் முக்கிய பொறுப்பை, திறமையான தலைவர்கள் வகித்துள்ளனர். இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.மத்திய அமைச்சர், ராஜிவ் சுக்லா பேசியதாவது: அடுத்த தேர்தலின் பிரதமர் வேட்பாளராக ராகுலை நியமிக்க வேண்டும் என்பதே, கட்சியில் உள்ள, பெரும்பாலான தலைவர்களின் விருப்பம். இந்த கோரிக்கையை, அவ்வப்போது, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


ஆனாலும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் பொறுப்பு, ராகுல், சோனியா ஆகியோரின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார். காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியதாவது: கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதை முடிவு செய்ய வேண்டியது, ராகுலே. மக்களுக்கு, அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வது தான், நம் நோக்கம். இவ்வாறு, மணிசங்கர் அய்யர் பேசினார்.


கூட்டத்தில் பேசிய பெரும்பாலான தலைவர்கள், ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, பேசியதை அடுத்து, ராகுலுக்கு எந்த நேரத்திலும், முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, டில்லி அரசியல் வட்டாரத்தில், நேற்று மாலையிலிருந்தே, தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற, காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்றிரவு நடந்தது. இதில், அனைவரும் எதிர்பார்த்தபடியே, காங்கிரஸ் கட்சியின், அகில இந்திய துணை தலைவர் என்ற, மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி, ராகுலுக்கு வழங்கப்பட்டது. கட்சியின் துணை தலைவர் பதவிக்கு, ராகுலின் பெயரை, காங்., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, அந்தோணி முன் மொழிந்தார். செயற்குழு, அதை ஏற்றுக் கொண்டது.




இதன்மூலம், காங்கிரஸ் கட்சியில், சோனியாவுக்கு அடுத்ததாக, நம்பர்-2 இடம், ராகுலுக்கு கிடைத்துள்ளது.ராகுல், கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் உள்ள, காங்கிரஸ் தொண்டர்களிடையே, உற்சாகம் கரை புரண்டோடியது. நேற்று இரவு முழுவதும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


நியமன பதவிக்கு முற்றுப்புள்ளி :



காங்கிரஸ் சிந்தனையாளர் கூட்டத்தில், கேரள மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசியதாவது: கட்சியின் அனைத்து மட்டங்களிலும், அனைத்து பதவிகளுக்கும், தேர்தல் மூலமாகவே, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். நியமனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதன் மூலமாகவே, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ராகுலின் நடவடிக்கை மூலமாகவே, இது சாத்தியமானது. இதேபோல், மற்ற பதவிகளுக்கும் தேர்தல் மூலமாகவே, ஆட்களை நியமிக்க வேண்டும். நியமனங்கள் மூலம், பதவிகள் நிரப்பப்பட்டால், கட்சி பலவீனமடைந்து விடும். இவ்வாறு ரமேஷ் சென்னிதலா பேசினார்.



தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (54)
loganathan - coimbatore,இந்தியா
20-ஜன-201317:25:37 IST Report Abuse
loganathan இவர் சென்னை வந்த பொழுது சொன்னார். நதிகளை எல்லாம் இணைக்க முடியாது என்று. இவரா அடுத்த பிரதமர்?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
20-ஜன-201316:57:44 IST Report Abuse
dori dori domakku dori no .1 no . 2 லாம் வேணாமே ப்ளீஸ் . பட்டணத்தில் பூதம் படத்தில் - மனோகர் கூபிடரா போல இருக்கு
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Sundar Kasimani - chennai,இந்தியா
20-ஜன-201316:10:59 IST Report Abuse
Sundar Kasimani காந்தியின் கனவை (காங்கிரஸ் கட்சியை கலைப்பது) நனவாக்க இருக்கும் ராகுல் வாழ்க...
Rate this:
6 members
0 members
8 members
Share this comment
mangaidaasan - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201313:09:08 IST Report Abuse
mangaidaasan இந்த காங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பதான் அதிகம். இருக்காதா பின்னே, இவர்கள் கருனாவுடனல்லவா கூட்டணி வைத்திருக்கிறார்கள். இங்கே மாநிலத்தில் தன் மகனுக்கு (ஸ்டாலின்) தலைவராக முடி சூட்டுகிறார்கள் அங்கே மத்தியில் தன் மகனுக்கு (ராகுல்) முடி சூட்டுகிறார்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Maali Raja - Tuticorin,இந்தியா
20-ஜன-201311:50:45 IST Report Abuse
Maali Raja இதுவும் கடந்து போகும். காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க.
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
subramanian - Mumbai,இந்தியா
20-ஜன-201311:50:43 IST Report Abuse
subramanian a receipe for a big disastor. Where is the self respect ?? Karuna with karunai to comment on the dynasty rule ??
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
mrsethuraman - Bangalore,இந்தியா
20-ஜன-201311:25:04 IST Report Abuse
mrsethuraman  கழுதை கெட்டா குட்டி சுவரு.
Rate this:
9 members
0 members
7 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-201311:01:47 IST Report Abuse
Baskaran Kasimani பிரியங்காவுக்கு மட்டும் ஏன் பதவி இல்லை? அவரையும் கூட ஏதாவது பெரிய பதவி கொடுத்து காங்கிரசும் ஒரு திமுக போன்ற மன்னராட்சி முறையில் இயங்கும் கட்சியாக அறிவித்து விடலாம்.
Rate this:
40 members
0 members
13 members
Share this comment
maha_lm - Tirunelveli - Nellai,இந்தியா
20-ஜன-201310:45:40 IST Report Abuse
maha_lm ஊழலின் உக்கிர தாண்டவம் : உரத்த சிந்தனை பக்கத்திலிருந்து : 128 வருட தேச பக்த வரலாற்றுக்குரிய காங்கிரஸ் கட்சி, தன் தலைமைக்கு, இந்திய மண்ணில் பிறந்து வாழும், 128 கோடி மக்களில் தகுதியான ஒருவர் கூடக் கிடைக்காமல், இத்தாலி நாட்டிலிருந்து இங்கு வாழ வந்த ஒருவரைத் தஞ்சம் அடைய வேண்டியுள்ளது. அத்தலைமைக்கு அக்கட்சியிலுள்ள அத்தனை பேரும் அடி பணிந்து சேவகம் செய்கின்றனர். அத்தலைமை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாடறியும். (நன்றி ஐயா திரு என்.கே.வேலு கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) இந்த லட்சணத்தில் இவருக்கு நமது நாட்டின் பிரதமர் பதவி ஆசை வேறு... உன் ஆசை நிறைவேறும் எப்போது என்றால் 2060 வது வருடம்.
Rate this:
23 members
0 members
16 members
Share this comment
Anniyan Bala - Chennai,இந்தியா
20-ஜன-201310:33:28 IST Report Abuse
Anniyan Bala பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா? ராகுல்ங்கற பேருக்கு எல்லாம் கிடையாது. வேணும்னா தீப்பந்தம் ஏத்திக்கலாம் காங்கிரஸ் கட்சில.
Rate this:
11 members
0 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.