ஈரோடு: மாநிலம் முழுவதும் காலியாக உள்ள வனச்சரகர் பணியிடங்களுக்கு, ஓய்வுபெற்ற ரேஞ்சர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், பதவி உயர்வுக்கு காத்திருந்த வனவர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக வனத்துறையில், 6,600 பேருக்கு மேல், பணியாற்றி வருகின்றனர். வனச்சரகர்களாக, 750 பேர், வனவர்களாக 2,460 பேர், வனக்காப்பாளர்களாக, 1,980 பேர், வனக்காவலர்களாக, 1,300 பேர் பணியாற்றினர்.
இதில், 2011ம் ஆண்டில், வனச்சரகர்கள், 360 பேர், வனவர்கள், 1,250 பேர், வனக்காப்பாளர்கள், 1,310, வனக்காவலர்கள், 580 பேர் ஓய்வு பெற்றனர். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், 2012ம் ஆண்டில், பல வனத்துறை அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றனர். இந்நிலையில், வனச்சரகர் பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வனவர்கள் பலர் இருந்தனர். ஆனால், காலியாக உள்ள ரேஞ்சர்கள் பணியிடத்தை, ஓய்வு பெற்ற ரேஞ்சர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டு, பல மாவட்டங்களில், மூத்த வனச்சரகர்கள் வன அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வனவர் ஒருவர் கூறியதாவது: தமிழக அரசுத் துறையில், 16 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு வழங்கி, அரசு கவுரவிக்கிறது. இதில், வனத்துறையை மட்டும் அரசு புறக்கணிப்பதால், தகுதிகள் இருந்தும், பதவி உயர்வு பெறாமலேயே பலர் ஓய்வு பெறுகின்றனர். தமிழக வனத் துறையில், 16 ஆண்டுக்கும் மேல், 150க்கும் மேற்பட்ட இளம் வனவர்கள் பணியாற்றி வருகின்றனர். வனச்சரகராக பதவி உயர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையில் இருந்தோம். "கார்டு' ஆக பணியில் சேர்ந்து, தாமதமாகவே வனவராக பதவி உயர்வு கிடைத்தது.
எங்களை புறக்கணித்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, மீண்டும், ரேஞ்சர் பதவி வழங்குவது, அதிர்ச்சி அளிக்கிறது. வனத்துறை ஊழியர்களை புறக்கணிக்கும் போக்கை, அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.