ரோம்:தன்னை வளர்த்த, எஜமானன், மறைவுக்கு பிறகும், தினமும், பிரார்த்தனை நேரங்களில், சர்ச்சுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள நாயை, தற்போது கிராம மக்கள், பராமரித்து வருகின்றனர்.இத்தாலி, ரோம் நகரை அடுத்த, பிரண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர், மரியா துலு கேம்பு. இவர் தன்னுடன், நான்கு உயர் வகை நாய்களை வளர்த்து வந்தார். அவற்றில், ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த, டாம்மி, 12, என்ற நாயையும், அவர் வளர்த்து வந்தார்.
அவர் அருகே உள்ள சர்ச்சுக்கு, தினமும் செல்வது வழக்கம்.அப்போது, டாம்மியையும், அவர் அழைத்துச்செல்வார்.இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன், அவர் இறந்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டது வரை, கூடவே, கிராமத்தினரைப் போலவே, டாம்மியும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றது. தனதுஎஜமானனை இனி பார்க்க முடியாது, என்பதை உணர்ந்த டாம்மி, அவரது மறைவிற்கு பிறகு, தனியே சர்ச்சுக்கு செல்லத் துவங்கியது.
""சர்ச்சில் பிரார்த்தனை துவங்கும் நேரத்தில், ஒலிக்கப்படும் மணியோசை கேட்டதும், சர்ச்சுக்கு வந்து, முதல் வரிசையில் அமர்ந்து, நிகழ்ச்சிகள் முடியும் வரை, அமைதியாக அமர்ந்திருக்கும். அது மட்டுமல்லாமல், சர்ச்சில், இரு மாதங்களாக நடந்த, பிரார்த்தனை, சவ அடக்கம் உட்பட, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை, டாம்மி, வழக்கமாக கொண்டுள்ளது,'' என, பாதிரியார் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.