Advertisement
சென்னை விமான நிலைய புதிய முனையம்: துணை ஜனாதிபதி திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திரிசூலம்: சென்னை விமான நிலைய புதிய முனையங்களை, துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. சென்னை விமான நிலைய விரிவாக்க பணி, 2008ல் துவங்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவில், புதிய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம், கார் பார்க்கிங் உட்பட, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், பிரமாண்டமான விமான நிலையமாக, சென்னை விமான நிலையம் மாற்றப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், பணியாளர்கள் பற்றாக்குறை, கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் என, பல்வேறு காரணங்களால் இரு ஆண்டுகள் தாமதமாக பணி முடிந்து, இறுதி வடிவம் பெற்றுள்ளது.
துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, சென்னை விமான நிலைய புதிய முனையங்களை, வரும், 28ம் தேதி திறந்து வைக்கப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக, விமான நிலைய தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை விமான நிலைய புதிய முனையங்களை, துணை ஜனாதிபதி திறப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், 28ம் தேதி திறப்பு விழா என்பது, உறுதி செய்யப்படவில்லை. ஜன., 31ம் தேதிக்குள் திறப்பு விழா உறுதியாக இருக்கும்' என்றார்.
நவீனப்படுத்தப்பட்டுள்ள, சென்னை, கோல்கட்டா ஆகிய இந்த இரண்டு விமான நிலையங்களையும், பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், இரு மாநில அரசுகளுக்கு இடையே, மத்திய அரசுக்கு இணக்கமான உறவு இல்லாததால், பிரதமர் திறப்பு விழாவில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், கோல்கட்டா விமான நிலையத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று திறந்து வைக்கிறார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Magesu - Vellore  ( Posted via: Dinamalar Android App )
20-ஜன-201300:23:53 IST Report Abuse
Magesu அம்மாவே தி்றந்து வைத்தி்ருக்கலாமே........எதுக்கு அந்த ஆள கூப்பிடறாங்க?
Rate this:
5 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.