புதுடில்லி:டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின், போலீசார் விழித்து கொண்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறியதாவது:புகார் கொடுக்க பெண்கள், போலீஸ் ஸ்டேஷனை அணுகினால், குற்றம் நடந்த இடம் எங்கே என்று பார்க்காமல், புகாரை உடனடியாக பதிய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதற்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய, "ஹெல்ப் லைன்' வசதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் ஸ்டேஷனில், அனைத்து, மகளிர் போலீசாருக்கும் டெலிபோன் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் பிரிவுக்கு தனியாக டெலிபோன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.ரோந்து போலீசார் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேன்கள் எண்ணிக்கை, 1,000 ஆக அதிகரிக்கப்படும். இதற்காக, 370 வேன்கள் அரசிடம் கேட்டு இருந்தோம். இதற்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. விரைவில், 418 பெண் சப் - இன்ஸ்பெக்டர்கள், 2,088 பெண் காவலர்களை நியமிக்க தேர்வு நடைபெற உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.