புதுடில்லி:சிறாருக்கான வயது வரம்பை, 18லிருந்து 16 ஆக குறைப்பதற்கு, சட்டத்திருத்தம் கொண்டு வர, டில்லி போலீசார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.டில்லியில், மருத்துவ கல்லூரி மாணவி, கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாக இருப்பவர், சிறார் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பள்ளியில் கொடுத்த ஆவணங்களின் படி, சிறார் தான் என, பள்ளியின் முதல்வர்கள், சிறார் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில், சிறார்களுக்கான வயது வரம்பு, 18 ஆக இருப்பதை, 16 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ""சிறார் என்பதற்கான வயதை, 16 என, நிர்ணயம் செய்யலாம். இது, என்னுடைய கருத்து. இது தொடர்பான மசோதா ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இருப்பினும், டில்லி சம்பவத்தை பொறுத்தமட்டில், இது தேவையான ஒன்று,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.