சென்னை : "பள்ளி, கல்லூரிகளில் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு' குறித்த பாடங்கள், இடம்பெற வேண்டும் என, சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் ராகவன் கூறினார். முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவனுக்கு, சைபர் சொசைட்டி மற்றும் பிரைவசி பவுண்டேஷன் அமைப்பு, ஆயுள் கால சாதனையாளர் விருது வழங்கியது. இந்தியாவிற்கான பாதுகாப்பு பணிகளில், மிகச்சிறந்த சேவை செய்ததற்காக, இந்த விருது வழங்கப்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கி இயக்குநர் விஸ்வநாதன், ராகவனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.
முன்னாள் சி.பி.ஐ., இயக்குநர் ராகவன் பேசியதாவது: " செல்போன், ஐ-பேடு போன்ற, மின்னணு சாதனங்களின் பயன்பாடு, அதிகரித்து வருகிறது. இதன்மூலம், பல தரப்பட்ட தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பயன்பாடு அதிகரித்து வருவதால், பாதுகாப்பும் அவசியமாகிறது. சமூக வலை தளங்களான, பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் உள்ள, தகவல்களை திருடுதை சிலர் தொழிலாக கொண்டுள்ளனர். செல்போன் வழியாக, வங்கி பண பரிமாற்ற சேவை பெற தற்போது வசதி உள்ளது. செல்போன் தொலையும் பட்சத்தில், பண பரிமாற்றத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்புடன் பணபரிமாற்றம் செய்ய வேண்டும். இணைய தளத்தில் பணபரிமாற்றம் செய்யும் போது, சொந்த கணினியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரகசிய எண்ணை யாரும் எளிதில் யூகிக்க முடியாத அளவுக்கு, தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்.
ராணுவ ரகசியங்களை திருடும் அளவுக்கு, தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களில் "சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு " குறித்த, பாடங்கள் இடம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், சென்னை பல்கலை குற்றவியல் துறை தலைவர் திலகராஜ், இந்திய சைபர் சொசைட்டி அண்ட் பிரைவசி அமைப்பின் ஆளுநர் குழுத் தலைவர் ராமமூர்த்தி, பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.