சிவகங்கை: ஈமு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் போன்ற, போலி நிதி நிறுவனங்களால், மக்கள் ஏமாறுவதை தடுக்க, பதிவு பெற்ற நிதி நிறுவனங்களின் பட்டியலை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இன்டர்நெட்டில் வெளியிட்டு உள்ளனர்.
நடிகர், நடிகைகள் தோன்றும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி, அதிக லாபம் என்ற பெயரில் ,ஈமு, நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டம் என, பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்; ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏமாற்றும் திட்டம் முடிந்ததும் "எஸ்கேப்' ஆகிவிடுகின்றனர். இந்நிலையில், மக்கள் ஏமாறுவதை தடுக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர்.
இதுகுறித்து, வெளியிடப்பட்டு உள்ள விழிப்புணர்வு அறிவிப்பு: ரிசர்வ் வங்கியில் பதிவான நிதிநிறுவனங்களை நம்புங்கள்.
* பதிவான நிதி நிறுவனங்களின் பெயர். முகவரி (commonman/ english/ soripts/nbfcs.aspx) எனும் இணையதள முகவரியில் பார்க்கலாம்.
*ஐந்து ஆண்டுகளில், முதிர்வு த்தொகை வழங்கும் நிதி நிறுவனங்களில் டிபாசிட் செய்யுங்கள். 12.5 சதவீதத்திற்கு மேல், வட்டி அறிவிக்கும் நிதி நிறுவனங்களை நம்பாதீர்கள். எவ்வித வருவாயில், வட்டி கிடைக்கிறது என, நிதி நிறுனவங்களிடம் கேட்க வேண்டும். எந்த நிறுவனமும், பரிசு, ஊக்கத் தொகை அறிவிக்கக் கூடாது.
* எவ்வித டிபாசிட்டாக இருந்தாலும் ரசீது பெற வேண்டும். பரிசுச் சீட்டு, பண சுழற்சி திட்டத்திற்கு, 1978ன் தடை சட்டம் அமலில் உள்ளது. அங்கீகாரமில்லா சீட்டு, பண சுழற்சி திட்டம் பற்றி, எஸ்.பி.,க்களுக்கு புகார் செய்யலாம். விபரங்களை தெரிந்து, போலிகளிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.