Jaya announced demonstration against Central Govt | மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு

Updated : ஜன 21, 2013 | Added : ஜன 20, 2013 | கருத்துகள் (54)
Advertisement
மத்திய அரசை கண்டித்து, இம்மாதம், 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னை: "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மறுப்பது; பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளை உயர்த்தி, மக்களை துன்பத்துக்கு உள்ளாக்குவது என, தொடர்ந்து நாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து, இம்மாதம், 24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, பல முறை வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற்றும் கூட, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு, காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கொடுக்கும் நெருக்கடி தான் காரணம் என, தெரிகிறது.
மேலும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்கவும், மத்திய அரசு மறுத்து வருகிறது. தமிழகத்தின் தேவைகள், உரிமைகள் பற்றி, தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசுவதற்கும், போதிய கால அவகாசம் வழங்க மறுக்கின்றனர்.
இதற்கிடையே, விஷம் போல் உயரும் விலைவாசியை கட்டுப்படுத்தாமல், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ரயில்வே கட்டணங்களை, மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால், மக்கள், சொல்லொண்ணா துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தின், உரிமைகளை பறித்தும், கூட்டாட்சி தத்துவத்துக்கு கேடு விளைவிக்கும் மத்திய அரசுக்கும், தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும், தி.மு.க.,வுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்கு கூடுதல் நிதி :


தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வலியுறுத்தியும், டில்லி அரசு ஒப்படைத்த மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்; கூடங்குளம் உள்ளிட்ட, மத்திய நிறுவனங்களால், தமிழகத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்துக்கே அளிக்க வேண்டும்; தமிழகத்தின் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது; தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தி, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், மாவட்டத் தலை நகரங்களில் இம்மாதம் 24ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் இணைப்பு சங்கங்கள் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் பங்கேற்பர்.
இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஜன-201319:24:37 IST Report Abuse
Pugazh V ஆளும் கட்சியே தனது மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் பொது மக்களின் மாமூல் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இந்த முன்னுதாரணம் கண்டிக்கத் தகாது. யாரைத் திருப்திப் படுத்த இந்த காஸ்ட்லி நாடகம்? கடைகளை காவல் துறையினரே அடைக்க சொல்வார்களோ? பஸ்களை இயக்க வேண்டாம் என்று அரசே சொல்லுமோ? என்ன விதமான போராட்டம் இது? தமிழக மக்கள் ஒரு நாள் அனுபவிக்கப் போகும் சங்கடங்களுக்கு மத்திய அரசு காரணமா? மாநில அரசு காரணமா?
Rate this:
Share this comment
Cancel
nsathasivan - chennai,இந்தியா
20-ஜன-201319:12:42 IST Report Abuse
nsathasivan பேசாமல் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு தான் என்று சொல்லிவிட்டால் போகிறது .
Rate this:
Share this comment
Cancel
chandru - Tirupattur,இந்தியா
20-ஜன-201317:46:35 IST Report Abuse
chandru இது மாநில அரசின் வேதனை வெளியீடு, மாநில அரசு சொல்வதை மத்திய அரசும், மத்திய அரசு சொல்வதை மாநில அரசும் கருத்தில் கொள்ளவேண்டும், மத்திய அரசு எல்லா மா நிலங்களுக்கும் சமமாக நடந்து கொள்ளவேண்டும். எனவே இந்த செயல் பாடுகள், அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தும் தேவை என்பதனை உணர்த்துகின்றது இதை சட்டம் இயற்றுபவர்கள் உணர்வார்களா..........
Rate this:
Share this comment
Cancel
N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா
20-ஜன-201315:18:29 IST Report Abuse
N.KALIRAJ இது.....உங்களுக்கே கொஞ்சம் அதிகமாகத் தெரியவில்லையா......முதலில் உங்களால் உயர்த்தப்பட்ட கட்டணங்களுக்கும் விலைகளுக்கும் பதில் சொல்லுங்கள்....பிறகு மத்திய அரசை கண்டிக்கலாம்.......இப்படியெல்லாம் அறிக்கைவிட எப்படி மனசு வருகின்றது.....இதுதான் அரசியல் ஓர் சாக்கடை என்பதுவோ....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-ஜன-201312:54:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி இது மத்திய அரசையும், சொக்கத் தங்கம் சோனியாவையும் அவமானப்படுத்தும் செயல் என்று எண்ண வேண்டாம்.. தமிழ்நாட்டில் பால், பேருந்து, மின்சாரம் என்று ஒன்று விடாமல் விலை ஏற்றி மக்களின் முதுகெலும்பை உடைத்த போது, அதை எதிர்த்து சோனியா என்ன டெல்லியில் போராட்டம் நடத்தினார்களா என்று சலனம் வேண்டாம் ?? உங்களின் விலைவாசியை எதிர்த்து குரல் கொடுத்த போது அப்படி பேசியவர்கள் மீது நீங்கள் அவதூறு வழக்கு போட்டது போல சொக்கத் தங்கமும் உங்களின் மேல் அவதூறு வழக்கு போடுவார் என்று பயப்பட வேண்டாம்.. உங்களின் வக்கீல் படையை வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வாய்தா வாங்கி போராடுங்கள்.. வீர மங்கையே, கொடநாட்டு கோமளவல்லியே...படையெடுங்கள் டெல்லி நோக்கி... பெங்களூரை அப்பாலே கவனிச்சுக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
20-ஜன-201312:06:44 IST Report Abuse
Shaikh Miyakkhan இதை தான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தேன் லேட்டாக செய்தாலும் லேட்டசக செய்ய உள்ளீர்கள் . ஏன் என்றால் ஒரு மாநில மக்கள் இருட்டில் தவிக்கும் போது அதுக்கு உதவி செய்ய இயலாத அரசுக்கு இது போன்று போராட்டத்தின் மூலம் எச்சரிக்கை செய்ய வேண்டும். மத்திய அரசால் தமிழகதிற்கு இழைக்க படுகின்ற வஞ்சகத்தை எத்தனையே முறை தாங்கள் எடுத்து உரைத்தும் அதை காதில் வாங்கி கொள்ளாத மத்திய அரசை எதிர்த்து போராடுவது வரவேற்க வேண்டியது ஓன்று. அதை போல் தமிழகத்தின் மத்திய அமைச்சர்களையும் கண்டனம் செய்ய வேண்டும். இந்த போராட்டம் அதிமுக தொழிற் சங்கதிர்க்கனா போராட்டம் அல்ல வஞ்சிக்க படுகின்ற ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமை குரல் போராட்டம். இதற்க்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
20-ஜன-201311:41:37 IST Report Abuse
Yoga Kannan அட சொங்கிகளா இந்த அம்மையார் போடுற ஆட்டத்கெல்லம் ஜால்ரா போட்டே பழகிடீங்க.... உங்கள எம்ஜி ஆர் மீண்டும் வந்தாலும் திருத்த முடியாது...என்னா அவருடைய கொடும்பாவிஏய் கூட அம்மையாருக்கு சப்போர்ட்டா செய்வீங்க...
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201309:54:38 IST Report Abuse
SK2011 இந்த போராட்டம் தி மு க விற்கு வயிற்றில் புளியை கரைக்க வைக்கும் போராட்டம். தி மு க ஒரு தேச துரோக கட்சி. ஒழுங்காக நேர்மையாக ஆட்சி செய்யும் ஜெயலலிதா அம்மையாரை தி மு க முட்டுக்கட்டை போட்டு மக்களுக்கு திரோகம் செய்கிறது. இந்த செயல் தொடருமானால் அது தி மு க விற்கு தானே தற்கொலை செய்ய வழி செய்யும். மக்கள் அத்தனனயும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த தீய சக்தி கூடாரத்தை விரட்ட மக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
s.vijayashankar - chennai-600106,இந்தியா
20-ஜன-201309:25:22 IST Report Abuse
s.vijayashankar வருகின்ற நாடாளுமன்றத்தில் நாற்பதும் வெற்றி பெற வேண்டும் அதற்காக நான், எனது அரசு (ஜெயலலிதா ) என்ன வேண்டுமானுலும் செய்வோம்
Rate this:
Share this comment
Cancel
manjai.v.mohan - Ooty free IAS academy ,இந்தியா
20-ஜன-201309:01:43 IST Report Abuse
manjai.v.mohan தமிழ் நாட்டில் காங்கிரஸ் உடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் 40 சீட் உறுதி ....போராட்டம் எல்லாம் சரிப்பட்டு வராது அம்மா ....கூட்டணி மட்டுமே சரிப்பட்டுவரும் ...இப்போ போச்சுன இனி 5 வருஷம் டெல்லி இருக்கும் திசை கூட தெரியாமல் போய்விடும்...அப்புறம் உங்க இஷ்டம் ....ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை