அருப்புக்கோட்டை: மதுரை யாகப்பா நகரை சேர்ந்த உமல்பேகம், 36, கடந்த மாதம் மாயமான நிலையில், விருதுநகர் அருப்புக்கோட்டையில், போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களுக்கு "டிமிக்கி' கொடுத்து, கிணற்றில் இறங்கிய அவரை, பல மணிநேர போராட்டத்திற்கு பின், மீட்கப்பட்டார். மதுரையை சேர்ந்த மெகபூப் பாட்ஷாவின், 2 வது மனைவி உமல்பேகம். மன நிலை சரியில்லாத இவரை, டிச., 20 ம் தேதி முதல் காணவில்லை. தந்தை ரேஷ்காத்தூஸ், கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியில், உமல்பேகம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கருப்பாயூரணி எஸ்.ஐ., சிவசக்தி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, மின்வாரிய அலுவலகம் அருகில், உமல் பேகத்தை பிடித்து, தங்களுடன் வருமாறு கூறினர். அதற்கு மறுத்த அவர், போலீசாரை தள்ளி விட்டு, அருகில் உள்ள கிணற்றில் இறங்கினார். மேலே வர மறுத்த அவர், "அருகில் வந்தால் உள்ளே குதித்து விடுவேன் ' என, மிரட்டினார். அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், பல மணி நேரம், சமரசம் செய்தும் பலன் இல்லை. இரவு, 9:00 மணிக்கு, உள்ளுரை சேர்ந்த இளைஞர்கள் சாதுர்யமாக பேசி, கிணற்றில் இறங்கி மீட்டனர். போலீசார், அவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.