கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மக்காச்சோள தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் "தீ' யால் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளம் கருகின. கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் மழை பொய்த்ததால், ஏராளமான விவசாயிகள் சோளம், கம்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று விவசாயிகளின் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் கருகின. இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். இதுகுறித்து விவசாயி அனுமந்த கிருஷ்ணன், கமுதி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் எதிர்பாராத தீ விபத்து என வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.