ஈரோடு: தமிழக வனப்பகுதி வறண்டு காணப்படும் நிலையில், குட்டியை காக்க, காட்டு யானைகள் விரட்டுவதால், சாது விலங்குகள், பசியோடு காத்திருக்கின்றன. தமிழகம் முழுவதிலும், 22 ஆயிரத்து, 877 சதுர பரப்பு கிலோமீட்டர் வனப்பகுதியாக உள்ளன. தமிழக வனப்பகுதியில், யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, ஓநாய், மான், காட்டுப்பன்றி, முயல், கரடி உள்ளிட்ட அனைத்து வகையான விலங்கினமும் வசிக்கின்றது.
பருவ மழை பொய்த்ததால், வனப்பகுதியில் உள்ள குளம், ஏரி, கசிவுநீர் குட்டைகள் வறண்டன. பசுமையாக இருந்த வனப்பகுதி, வறண்ட பாலைவனமாய் மாறியதால், குடிநீருக்கும், உணவுக்கும், விலங்குகள் திண்டாடுகிறது.
சில மாதத்துக்கு முன், இலங்கைக்கும், தமிழகத்துக்கும் நடுவே ஏற்பட்ட புயலால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் மழை பெய்தது. இதனால், வனப்பகுதி சற்றே செழித்து, விலங்கின் உணவு, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.
இந்நிலையில், வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து, குட்டியை காக்க காட்டு யானைகள் மற்ற விலங்கை விரட்டுகிறது. இதனால், வேட்டையாடும் விலங்குகள் சாது விலங்குகளை இரையாக்குகிறது.
இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டாக தமிழக வனப்பகுதியில் வசிக்கும் வன உயிர்களுக்கு, உணவு, குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சில மாதத்துக்கு முன் பெய்த கனமழையால், சற்றே பசுமை படர்ந்து வனப்பகுதி காட்சியளிக்கிறது. வன உயிர்களை பொறுத்தவரை, குட்டியை பேணிக்காப்பதில் யானைகள் முதன்மையாக விளங்குகிறது. சராசரியாக ஒரு யானைக்குட்டி, 200 முதல், 300 கிலோ வரை இருக்கும். யானைக் குட்டியை, புலிகள் எளிதாக வீழ்த்தி இரையாக்கிவிடும். புலி, நரி, வேட்டை நாய் கூட்டங்களிடம் இருந்து, யானைக்குட்டியை, தாய், அத்தை யானைகள் பாதுகாக்கும். பச்சை பசேல் என காட்சியளிக்கும் புல்வெளி பகுதியில் யானைக்கூட்டமும், மான், காட்டுப்பன்றி கூட்டங்களும் அதிகமாக இருக்கும். மான், காட்டுப்பன்றியை வேட்டையாட வரும் புலி, நரி, வேட்டை நாய் கூட்டத்தால், யானை குட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, பச்சை பசேல் என இருக்கும் புல்வெளியிடம் இருந்து, காட்டுப்பன்றி, மான், முயல் போன்ற சாது விலங்கினை, தான் வசிக்கும் எல்லையில் இருந்து விரட்டும் பணியில், தாய், அத்தை யானைகள் ஈடுபடுகிறது. யானையின் எல்லையில் இருந்து வெளியேறும் சாது விலங்குகள், புலிகளின் எல்லைக்குள் எளிதாக சிக்கி கொள்கின்றன. தம் எல்லைக்குள்ளேயே, எளிதாக இரை கிடைப்பதால், யானைகளின் எல்லைக்குள், வேட்டை விலங்கு செல்வது தவிர்க்கப்படுகிறது. வேட்டை விலங்கிடம் இருந்து குட்டியை காக்க, தாய்ப்பாசத்தில் யானைகள் செய்யும் தந்திரமான யுக்தி இது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.