prevent cross-border tension: Karunanidhi | எல்லை பதற்றம்: தடுக்க வேண்டும்: கருணாநிதி | Dinamalar
Advertisement
எல்லை பதற்றம்: தடுக்க வேண்டும்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய வீரரின் தலையை துண்டித்து, பாகிஸ்தான் எடுத்துச் சென்றுள்ளது, அனைத்துத் தரப்பினரையும் கொதிப்படையத் செய்துள்ளது. பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், பாகிஸ்தானுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறியுள்ளனர். எல்லையில் இதுபோன்ற சம்பவங்கள், இனிமேல் நடக்காமல் இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என, நம்பிக்கையுள்ளது.என்ன செய்யப் போகிறது ? :

ராஜபக்ஷே அரசின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்தி, ஐ.நா., சபையில் ஆதரவு திரட்டியவரை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளனர். ராஜபக்ஷேவின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியாக, இந்த நியமனம் நடந்துள்ளது. தமிழகத்தில் அரிசி, காய்கறி, அசைவ உணவுகளின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. இதைத் தடுக்க, தமிழக அரசு என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை.


இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (67)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.saravanan - tirupur,இந்தியா
25-ஜன-201315:45:44 IST Report Abuse
p.saravanan தாங்களது இல்ல பிரச்சனைகளை முதலில் தீருங்கள். தானாகவே எல்லை பிரச்னை முடிந்து விடும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Barotta Thalaiyan - Kingston,ஜமைக்கா
21-ஜன-201303:31:28 IST Report Abuse
Barotta Thalaiyan எந்த எல்லை பிரச்சினையை சொல்கிறார்? மதுரை (அழகிரி) - சென்னை (ஸ்டாலின்) இடையே உள்ள பிரச்சினையையா?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
20-ஜன-201318:52:56 IST Report Abuse
Ramasami Venkatesan இவரையும் இந்தியா-பாகிஸ்தான் சமாதான பேச்சு குழுவில் ஒரு மெம்பராக சேர்த்துக்கொள்ளலாமே - பாகிஸ்தானுடன் சமரச பேச்சு பேச நல்ல நபர் - இலங்கை தமிழர் பிரச்னையில் நன்றாக செயல்பட்ட அனுபவம் வேறு.
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
20-ஜன-201317:34:30 IST Report Abuse
adithyan ஏன், இங்கே கல் எறியவும் பேருந்தை கொளுத்தவும் உபயோகமாகும் கட்சி தொண்டர்படை, குண்டர்படை ஆகியவற்றை தலைவர் எல்லை கோட்டிற்கு அனுப்பலாமே. ஒ, ஒ, மறந்தே போனேன். அப்படி செய்தால் அவரது முஸ்லிம் ஓட்டுகள் போய்விடுமல்லவா?
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel
rajan - thane,இந்தியா
20-ஜன-201316:17:58 IST Report Abuse
rajan தூறல் நின்னு போச்சு ,இடி எப்பவம் கேக்கத்தான் செயும்,அம்மாவின் ஆசை உங்களுக்கும் வந்துவிட்டது போல் தெரிகிறது
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-ஜன-201310:54:45 IST Report Abuse
Baskaran Kasimani திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் தேசிய முன்னேற்ற கழகத்தலைவர் ஆனது அதிக மகிழ்ச்சி.. ஆனால் இதிலும் கூட பல்டி அடிக்காமல் இருக்க வேண்டும்..
Rate this:
3 members
0 members
31 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201315:57:21 IST Report Abuse
தமிழ்வேல் அகில இந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் தன வேலையை இன்னும் செய்ய வில்லையே ?...
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
20-ஜன-201310:53:39 IST Report Abuse
Maali Raja கடினமான முடிவுகள் எடுப்பதும், உணர்வுகளை வெளிக்காட்டுவதும் இரண்டு வெவ்வேறு பிரச்சினைகள் ஆகும். சில சூழ்நிலைகளில் கடினமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் உணர்ச்சிகளின் உந்துதலால் முடிவுகள் எடுக்கக்கூடாது. ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளை சமநிலையுடன் கையாள வேண்டும். நன்றி - ராகுல்
Rate this:
6 members
0 members
53 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201315:55:37 IST Report Abuse
தமிழ்வேல் // ஆனால் உணர்ச்சிகளின் உந்துதலால் முடிவுகள் எடுக்கக்கூடாது. // உண்மை...அனுபவத்தில் கண்டது...// ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளை சமநிலையுடன் கையாள வேண்டும். // ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு......
Rate this:
0 members
0 members
31 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
20-ஜன-201310:45:21 IST Report Abuse
MJA Mayuram மிகப்பெரிய இந்திய நாட்டின் கட்டுப்பாடு கலைஞரின் கையிலிருக்கிறது என்பதை பொறுக்கமுடியாமல் ஒப்பாரி வைத்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். உலகத்திலேயே 50 ஆண்டுகள் பத்திர்க்கையின் முதல் பக்க செய்தியாக அல்லது முதன்மை செய்தியாக இருக்கும் ஒரே தலைவர் கலைஞர்தான் இது உலகறிந்த உண்மை. மலேசிய ,சிங்கப்பூர் ,இந்தோனேசிய, இலங்கை,கனடா,பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மன், போன்ற நாடுகளிலும் தினமும் திரு உருவ தரிசனம் தரும் தலைவர் கலைஞர் உலக நாயகன் என்பதில் உங்களுக்கு வயிறேரிகிறதென்றால் என்னால் ஒன்னும் செய்ய முடியாது. பக்கத்து கடையில் ஜெலுசில் வாங்கி சாப்பிடவும்
Rate this:
48 members
0 members
101 members
Share this comment
Prasath Prasanna - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201317:45:48 IST Report Abuse
Prasath Prasanna2g தான் காரணமோ ...
Rate this:
23 members
0 members
6 members
Share this comment
Cancel
Indian from Mumbai - Mumbai,இந்தியா
20-ஜன-201310:28:46 IST Report Abuse
Indian from Mumbai திமுக தளபதி எங்கே போர் முனைக்கு செல்லாமல் இங்கே என்ன பண்ணுகிறார். திமுக அஞ்சாநெஞ்சன் எங்கே போர் என்றால் புறமுதுகு கட்டிவிடுவாரோ. திமுக கலை பேரொளி எங்கே போர் முனையில் சென்று கொஞ்சம் மானட மயிலாட நிகழ்த்தினால் நமது வீரர்கள் கொஞ்சம் இளைப்பாறுவார்கள்.
Rate this:
59 members
0 members
56 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
20-ஜன-201310:25:41 IST Report Abuse
யமதர்மன் தமிழகத்தை தாண்டி ஒரு பொது விஷயத்துக்காக இப்போதுதான் முதன் முறையாக இந்த மனிதர் பேசியிருக்கிறார்.
Rate this:
4 members
70 members
30 members
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜன-201315:53:33 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை யாகவும் இருக்கலாம் ... அமாம் வருங்காலப் பிரதமர் என்ன சொல்கின்றார் ? இன்னும் தூங்குகின்றாரா ?...
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
20-ஜன-201319:33:41 IST Report Abuse
தமிழன்அதற்குக் காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மேலும் வாதம் செய்ய முடியாமல் முழிப்பதால் தான். ஏழை மக்களின் சாபம் வரும் என்று அறிக்கை கொடுத்துவிட்டு, ஏதோ தனக்கும் மத்திய ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லாதது போல் நடப்பதில் சமர்த்தர். மம்தா போல கொள்கைக்காக ஆட்சியிலிருந்த்து, கட்சிகள் விலகினால் ஆளும் வர்க்கத்துக்கு பயம் வரும்....
Rate this:
28 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்