Advertisement
மறுஅடகு வைக்கப்பட்ட ரூ.75 கோடி நகைகள் மீட்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:30

தேனி: தேனி மாவட்டத்தில், மூடப்பட்ட நகை அடகு நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் மறுஅடகு வைத்த, 135 கோடி ரூபாய் நகைகளை மீட்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், 65 சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள், நேற்று மாலை வரை, 75 கோடி ரூபாய்க்கான நகைகளை மீட்டுள்ளனர். மாவட்டத்தில் கணபதி பாங்கர்ஸ், ஜி.பி.கோல்டு லோன், தமிழ்கோல்டு லோன் உட்பட 6 நகை அடகு நிறுவனங்கள், தங்களின் 75 கிளைகளை கடந்த மாதம் மூடி விட்டன. இவற்றில், 90 ஆயிரம் பேர், தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்த நகைகளை, இந்நிறுவனங்கள் பல தனியார் நிறுவனங்களில், 135 கோடி ரூபாய்க்கு மறுஅடகு வைத்துள்ளன. பொதுமக்கள் அடகு வைத்ததை விட, அடகு பிடித்த நிறுவனங்கள் அதிக தொகைக்கு மறு அடகு வைத்துள்ளதால், இந்த நகைகளை மீட்பதில் சிக்கல் எழுந்தது. இதனை தொடர்ந்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தனியார் நிதி நிறுவனங்களில் அதிக தொகைக்கு மறுஅடகு வைத்துள்ள நகைகளை மீட்டு கோர்ட்டில் ஒப்படைக்க, தேனி மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அனுமதி கேட்டனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், மறு அடகு வைக்கப்பட்ட அனைத்து நகைகளையும் மீட்டு, கோர்ட்டில் ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு டி.எஸ்.பி., உமா, இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், அன்னக்கிளி தலைமையில், 65 சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் படையினர், தனியார் வங்கிகளில் மறுஅடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை வரை 75 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தம் 135 கோடி ரூபாய்க்கு நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளை திங்கள் மாலைக்குள் மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்து விடுவோம். கோர்ட் விசாரணை முடித்த பின்னர், நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் கோர்ட்டில் பணம் செலுத்தி நகைகளை திருப்பிக் கொள்ளலாம், என போலீசார் தெரிவித்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.