மேலூர்: மதுரை மேலூரில் அதிகாரிகளால் "சீல்' வைக்கப்பட்ட கிரானைட் குவாரி அலுவலகத்தின் பின் பகுதியை உடைத்து, 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக, போலீசில் புகார் செய்யப்பட்டது.
மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த முறைகேடான கிரானைட் குவாரிகள் மீது, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். சில கிரானைட் அலுவலகங்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. செக்போஸ்ட் அருகில் உள்ள, "மதுரா கிரானைட்' என்ற மூன்று மாடி அலுவலகம், ஆக.,8 ல் "சீல்' வைக்கப்பட்டு, பணியில் இருந்தவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, குவாரி உரிமையாளர்கள் தலைமறைவாகினர். பின் ஐகோர்ட் கிளையில் முன் ஜாமின் பெற்று, அலுவலகத்தை திறக்க, நேற்று முன்தினம் அனுமதி பெற்றனர். நேற்று, பின்புற கதவை உடைத்து, பொருட்களை சிலர் கொள்ளையடித்தனர். கம்ப்யூட்டர்கள், எல்.சி.டி., "டிவி', பேட்டரி, கிரேன் உதிரி பாகங்கள் கொள்ளை போனதாக, மேலாளர் வடிவேல் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.