தூத்துக்குடி: தூத்துக்குடியில், பிள்ளைகளின் கண்முன்னே, அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் செய்த, 58 வயது கணவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு, கொலை செய்த மனைவி, போலீசில் சரணடைந்தார். தூத்துக்குடி, தாளமுத்துநகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர், சாலமோன் ராஜ், 58; மளிகைக் கடை நடத்தி வந்தார். இவர் மனைவி, பாக்யசீலி, 51; இவர்களுக்கு, இரு மகள்கள், இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு, திருமணமாகி விட்டது. வழக்கமாக, வீட்டு மாடியில், தனி அறையில் தூங்கும், சாலமோன் ராஜ், பாக்யசீலியை, படுக்கையில் தன்னுடன் இருக்கும்படி வற்புறுத்தியுள்ளார். பாக்யசீலி மறுத்துள்ளார். அதை ஏற்காத, சாலேமோன் ராஜ், அவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இதனால், இருவரிடையே பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, பாக்யசீலியை, வழக்கம்போல், படுக்கைக்கு வருமாறு, சாலமோன்ராஜ் அழைத்தார். அதற்கு, அவர் மறுப்பு தெரிவிக்கவே, பிள்ளைகள் கண்முன்னே, இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதன்பின், சாலமோன் ராஜ், மாடி அறைக்கு சென்று தூங்கினார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, அங்கு சென்ற பாக்யசீலி, அம்மிக் கல்லை, சாலமோன் ராஜ் தலையில் போட்டு கொன்றார். பாக்யசீலி, தாளமுத்துநகர் போலீசில் சரணடைந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.