மூணாறு:மூணாறில், தந்தத்தில் சிக்கிய, பிளாஸ்டிக் குழாயுடன், காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. மூணாறு பகுதியில், ஒரு குட்டியுடன், நான்கு காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. தற்போது, இந்த காட்டு யானைகள், மாட்டுப்பட்டி அணையின், கரையோரத்தில் முகாமிட்டுள்ளன.இந்த கூட்டத்தைச் சேர்ந்த, ஆண் யானை ஒன்றின், வலது பக்க தந்தத்தில், உறை அணிந்தது போன்று, கருப்பு நிறத்தில் பிளாஸ்டிக் குழாய் சிக்கியுள்ளது. இதை வெளியே எடுக்க இயலாத நிலையில், யானை வலம் வருகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் இல்லை என்றாலும், குழாய் எவ்வாறு தந்தத்தில் சிக்கியது என்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மூணாறை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் மூலம், தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இது,யானையின் தந்தத்தில், எதிர்பாராத விதத்தில் சிக்கியிருக்கலாம் என, கருதப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதுக்கு தெரியது போல ,, இதில் தான் (பிளாஸ்டில் குழாயில்) மனிதன் தண்ணி கொண்டு போரான் ,, இதை உடைச்சால் தண்ணி கிடை க்கும் என்று , இந்த வரட்சியான நேரத்தில் நீர்நிலை இல் ஒன்னும் இருக்காது ,,, ஒரு வேலை அடுத்த தேர்தலில் இந்த 5 அறிவு யானையை கேட்டு வாக்கு போடுங்கள் ... மனிதனை விட இப்ப யானை புத்தி சாலி போல் எனக்கு தோணுது

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.