மண்டபம்: ராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள மீன் காட்சியகம், ஒரு ஆண்டாக பூட்டப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், மண்டபம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வண்ண மீன் காட்சியகம், 10 லட்ச ரூபாயில், 2004 ல், துவக்கப்பட்டது. ஆரம்பத்தில், கடலில் உயிருடன் பிடித்து வரப்படும் மீன்களை காட்சிக்கு வைத்திருந்தனர். இதைப் பார்க்க, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இங்கு பொழுது போக்கு இடங்கள் குறைவு என்பதால், மீன் காட்சியத்திற்கு அதிக கூட்டம் வந்தது. சிறப்பாக செயல்பட்ட காட்சியகம், ஒரு ஆண்டிற்கும் மேலாக பூட்டப்பட்டு உள்ளது. இது செயல்பட்டதற்கு சாட்சியாக, துருப்பிடித்த வரவேற்பு போர்டு மட்டுமே உள்ளது.
மண்டபம், மீன்வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீனவர்கள், தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி, வண்ண மீன்களை பிடிப்பதாக கூறி, வனத்துறையினர் தடுக்கின்றனர். இதனால் அடையாள அட்டை வழங்குமாறு எங்களை வலியுறுத்துகின்றனர். அடையாள அட்டை மூலம் மீனவர்கள் தவறான செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அவர்களை பரிசோதனை செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை. வண்ண மீன்கள், ஆறு மாதம் வரை தான், உயிரோடு இருக்கும். மீன்வரத்து இல்லாத நிலையில், காட்சியகத்தில் குறைந்தளவு மீன்களே உள்ளன. காட்சியகத்தை பார்வையிட யாரும் வருவதில்லை. இதனால் காட்சியகத்தை பூட்டியுள்ளோம், என்றார்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்ண மீன்களை பிடிப்பதாக கூறி, மீனவர்கள் தவறான மீன்பிடி தொழிலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. மீன்வளர்ச்சி கழகம் சார்பில் அடையாள அட்டை வழங்கினால், எங்களது பரிசோதனைக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.