3 state traffic disrupted | பழுதடைந்த லாரியால் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழுதடைந்த லாரியால் 3 மாநில போக்குவரத்து பாதிப்பு

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலூர்: லாரி பழுதாகி சாலையில் நின்றதால், தமிழக - கேரள - கர்நாடக மூன்று மாநிலங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணியிலிருந்து, தமிழக - கேரள எல்லையான கீழ் நாடுகாணி வரை, சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. நேற்று காலை, 10.00 மணிக்கு, கேரளாவிலிருந்து பாரம் ஏற்றி, மைசூரூ சென்ற லாரி ஒன்று, கீழ்நாடுகாணி அருகே பெரிய குழியில் சிக்கி பழுதாகி நின்றது. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களிலிருந்து, கூடலூர், ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் செல்லும் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், ஸ்தம்பித்து நின்றன. குடிநீர் கிடைக்காமல், பயணிகள், ஓட்டுநர்கள், சிரமத்திற்கு ஆளாகினர். பல பயணிகள் இறங்கி, நடந்தே சென்றனர். தேவாலா போலீசார், அப்பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழுதடைந்த லாரி சீரமைக்கும் பணி, நேற்று மாலை, 6:00 மணி வரை தொடர்ந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை