Advertisement
குணசீலன், முருகேசன் பதவிகள் அனைத்தும் பறிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:34

சென்னை: பல் மருத்துவ படிப்பு துவங்க லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட குணசீலன், முருகேசன் ஆகியோரது, மருத்துவ கவுன்சில் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், மேல் மருவத்தூரில் செயல்பட்டு வரும், ஆதிபராசக்திபல் மருத்துவக் கல்லூரியில், முதுகலை பல் மருத்துவ பட்டப் படிப்பு துவக்க அனுமதி கேட்டு, இந்திய பல் மருத்துவக் கவுன்சிலுக்கு விண்ணப்பித்தனர். பல் மருத்துவக் கவுன்சில் ஆய்வு குழுவினர், கடந்தாண்டு ஆய்வு செய்ததில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், அவற்றை நிவர்த்தி செய்ய, கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினரான முருகேசனுக்கு பணம் கைமாறுவதாக, சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, டாக்டர் முருகேசன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவரும், இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான, குணசீலனுக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு, அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இவர்கள் இருவர் மீதும், தமிழக அரசு தற்போது, நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தமிழக அரசின் சார்பில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினருக்கு பரிந்துரைக்கப்பட்ட, குணசீலன் பெயரை, திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. மேலும், குணசீலன் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகேசன் ஆகியோரை, தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் வகித்து வந்த பதவியிலிருந்தும், தமிழக அரசு நீக்கியுள்ளது. இது தவிர, மருத்துவமனைகள் நிர்வாகிகள் மற்றும் வல்லுனர்கள் குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், குணசீலன் நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அரசாணைகளை நேற்று தமிழக அரசு பிறப்பித்துள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.