திருச்சி: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மைத்துனர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, திருச்சி, ஐ.ஜி.,யிடம், டி.ஜி.பி., நடத்திய விசாரணையால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், தடைச் செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் கொடிக்கட்டி பறந்தவர் மார்ட்டின். இவரது மைத்துனர், கோவை மாவட்டம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜான் பிரிட்டோ. இவர், தற்போது சென்னையில் தங்கி உள்ளார். அ.தி.மு.க., ஆட்சி மாறிய பின், அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால், மார்ட்டினின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தது. அவரது கைத்தடிகளாக இருந்த சிலர், தற்போது வரை, கரூர், தாம்பரம் போன்ற இடங்களில் லாட்டரி விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை மிரட்டியதால், ஜான் பிரிட்டோவுக்கும், அவர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த, 13ம் தேதி பெரம்பலூர்- துறையூர் சாலையில் அரணாரை பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட, பெரம்பலூர், எஸ்.ஐ., விவேக்கை, ஜான் பிரிட்டோ, விளாங்குறிச்சியை சேர்ந்த சுப்பையன் மகன் ஆனந்த் வடிவேல் ஆகியோர், தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியால் குத்த முயன்றதாக, பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட இருவரும், ஜாமீனில் வெளிவந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஜான்பிரிட்டோவின் அக்காவும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமாரோஸ், சென்னையில், டி.ஜி.பி.,யிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, டி.ஜி.பி., ராமானுஜம், பெரம்பலூர் எஸ்.பி., ராஜசேகரனிடம் விசாரணை நடத்திய போது, "ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன் உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்தேன்' என, எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்தார். அதை தொடர்ந்து, ஐ.ஜி., அலெக்ஸாண்டர் மோகன் சென்னைக்கு அழைக்கப்பட்டார். டி.ஜி.பி., ராமானுஜம், இரண்டு நாட்களுக்கு முன், ஹைதராபாத் சென்றுவிட்டு, நேற்று சென்னை திரும்பினார். ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகனிடம் நேற்று, அவர் விசாரணை நடத்தினார்.
ஐ.ஜி.,யிடம், டி.ஜி.பி., விசாரணை நடத்திய சம்பவம், போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணம் பறிக்கும் நோக்கிலேயே மார்ட்டினின் மைத்துனர் ஜான் பிரிட்டோ மீது பொய் வழக்கு போட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த போது, "ப்ரவரி மாதம் அலெக்ஸாண்டர் மோகன், ஓய்வு பெற உள்ளார். ஏ.டி.ஜி.பி., பதவி உயர்வு பட்டியலிலும் இருக்கிறார். இவரது பதவி உயர்வை விரும்பாத சில போலீஸ் அதிகாரிகள், இவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்' என, ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.