சேலம்: ராமேஸ்வரம்-ஓகா ரயிலில், மூட்டைபூச்சி கடியை தாங்கி கொள்ள முடியாத பயணிகள், சேலத்தில் ரயிலை நிறுத்தி போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து, குஜராத் மாநிலம், ஓகாவுக்கு, வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சேலம், திருப்பதி, ரேணிகுண்டா வழியாக, இயக்கப்படும் இந்த ரயில், 2,500 பயணிகளுடன், நேற்று காலை, 6:00 மணிக்கு, சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, ஏ.சி., பெட்டி மற்றும் முன்பதிவு பெட்டிகளில் இருந்த, 50க்கும் மேற்பட்ட பயணிகள், அவசரமாக கீழே இறங்கினர். பெட்டிக்குள், மூட்டை பூச்சி தொல்லை அதிகமாக உள்ளதால், நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. எங்களை, வேறு ஏ.சி., பெட்டிக்கு மாற்ற வேண்டும். அதுவரை, ரயிலை இயக்கக்கூடாது என கூறி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளின் போர்கொடியால், ரயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது. தகவல் அறிந்த, ரயில்வே அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பயணிகளுடன் பேச்சு நடந்தது. அப்போது, ராமேஸ்வரத்தில் ரயில் புறப்பட்டதில் இருந்து, மூட்டை பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை.
இதுபற்றி, ஒவ்வொரு ஸ்டேஷனிலும், ரயில் நின்றபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதற்கு, அடுத்த நிலைய அதிகாரிகள் வசம் நேரில் புகார் செய்யும்படி, அறிவுறுத்தி அனுப்பினர்.
ஆனால், எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. எங்கள் கோரிக்கையை தட்டி கழிப்பதில் தான் அதிகாரிகள் குறியாக இருக்கின்றனரே தவிர, பிரச்னையை தீர்க்கவில்லை என, பயணிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
பயணிகளின், நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், திணறிய அதிகாரிகள், இப்போது, புறப்பட்டு செல்லுங்கள், ரயில் திருப்பதி சென்றதும், அங்கு, வேறு பெட்டியை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். வழக்கம் போல, நீங்களும், திருப்பதி நிலையத்தை கை காட்டுகிறீர்களே தவிர, நீங்கள், நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள் என, எதிர்கேள்வி கேட்டதால், மேலும், பரபரப்பு தொன்றி கொண்டது. வேறு வழியில்லாமல், அதிகாரிகளின் வாக்குறுதியை ஏற்று, பயணிகள், போராட்டத்தை கைவிட்டனர். 30 நிமிடம் தாமதமாக, ரயில் புறப்பட்டு சென்றது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.