சென்னை: மின் இணைப்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய உதவி செயற்பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், மடிப்பாக்கத்தில், கார், ஆட்டோக்களுக்கு, எரிவாயு நிரப்பும் நிலையம் துவங்க உள்ளார். இதற்கு மின் இணைப்பு கேட்டு, நங்கநல்லூர் துணை மின் நிலையத்தில், கடந்த, டிச., 21ம் தேதி மனு கொடுத்தார். மின் இணைப்பு கொடுக்க, துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் நடராஜன், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, ரவிக்குமார், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரசாயனம் தடவிய, 10 ஆயிரம் ரூபாயை, ரவிக்குமார், நடராஜனிடம் நேற்று கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில், மறைந்திருந்த போலீசார், 10 ஆயிரம் ரூபாயுடன் நடராஜனை கைது செய்தனர். மேலும், மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து, 11,10 லட்சம் ரூபாய் மற்றும் 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை, போலீசார் கைப்பற்றி, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.