தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மாயமான பள்ளி மாணவரை, கண்டுபிடித்துதரக்கோரி, கிராம மக்கள் சாலைமறியல் செய்தனர். தூத்துக்குடிமாவட்டம், ஆத்தூர், மேலசேர்ந்தபூமங்கலம், கொடிவேல் மகன் முத்துகணேஷ்,16; அங்குள்ள பள்ளியில், 9ம்வகுப்பு படித்தார். கடந்த, 17ம்தேதி மாலை வீட்டை விட்டுச்சென்றவர், மாயமாகிவிட்டார். இதுகுறித்து, பெற்றோர், ஆத்தூர் போலீசில், புகார் செய்தனர். பலஇடங்களில் தேடியும் அவரைக்காணவில்லை.
அவரை கண்டுபிடித்து தரக்கோரி, மேலசேர்ந்தபூமங்கலம் கிராமமக்கள் ஏராளமானோர், நேற்று காலை மற்றும் மாலையில், வடக்கு ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் மெயின் ரோட்டில், சாலைமறியல் செய்தனர். தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி., கண்ணன், அதிகாரிகள் அவர்களிடம் பேசி, முத்துகணேஷை, விரைவில் கண்டுபிடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். அதனால், மறியல் முடிவுக்கு வந்தது. அவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.