மாமல்லபுரம்: ஆந்திராவை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இரண்டு மாணவர்கள், மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமாகினர். ஆந்திர மாநிலம், நாராயண்பேட்டை, மகபூப் நகரில் லிட்டில் ஸ்டார் உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியை சேர்ந்த, ஏழு ஆசிரியர்கள் மற்றும், 41 மாணவர்கள், நேற்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அனைவரும் மாலை, 5:00 மணிக்கு, கடற்கரை கோவில் அருகில், கடலில் குளித்தனர். அப்போது, ஆசிரியர் சுரேஷ், 32, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அகில், 15, கிஷோர், 15, ஆகியோர் அலையில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணியில், மாமல்லபுரம் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.