பெண்ணாடம்: பள்ளி மாணவர் விடுதிக்கு ஆய்வுக்கு சென்ற ஆர்.டி.ஓ.,வை, தடுத்து நிறுத்திய, "போதை' வார்டன், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாணவர் விடுதியில், ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அங்கிருந்த விடுதி வார்டன் பானுகோபன், குடிபோதையில் இருந்தார். ஆர்.டி.ஓ.,வை தடுத்து நிறுத்தி, "யார் நீ? விடுதிக்கு எதுக்கு வந்த?' என குழறியபடி கேட்டவர், ஆர்.டி.ஓ., எதிரிலேயே, விடுதி வராண்டாவில், "மட்டையாகி' படுத்து விட்டார்.
மாணவர்களிடம், ஆர்.டி.ஓ., விசாரித்த போது, "இது தினமும் நடக்கும் கூத்து தான்' என, தெரிவித்தனர். கடந்த இரு நாட்களாக, விடுதி சமையலர் பணிக்கு வராததால், மாணவர்களே சமைத்து சாப்பிடுவதும் தெரிய வந்தது.
குடிபோதையில் இருந்த வார்டன் பானுகோபனை, சஸ்பெண்ட் செ#து உத்தரவிட்ட, ஆர்.டி.ஓ., விடுதிக்கு வராத, "சமையலர் குமாரசாமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.