கோல்கட்டா:"" மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த, 50 ஆண்டுகளுக்கு, அந்த கட்சி தான், ஆட்சியில் இருக்கும்,'' என, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கோல்கட்டாவில் கூறியதாவது:பொதுவாக, மேற்கு வங்க அரசியலில், எனக்கு அதிக ஆர்வம் இல்லை. இருந்தாலும், ஒரு விஷயத்தை, இங்கு குறிப்பிட விரும்புகிறேன். திரிணமுல் காங்கிரசிடம் ஆட்சியை இழந்த, மார்க்சிஸ்ட் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த, 50 ஆண்டுகளுக்கு, அந்த கட்சி தான், ஆட்சியில் இருக்கும்.
இங்குள்ள நிலைமையை பார்க்கும்போது, இப்படித் தான், நடக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த, 50 ஆண்டுகளுக்கு, அந்த கட்சியை, யாரும் அசைக்க முடியாது. மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று, இங்கும், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் நடக்கத் தான் செய்கின்றன.மாநில அரசு, இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நம் நாட்டில், பல தலைவர்கள், பிரதமர் பதவிக்காக ஆசைப்படுகின்றனர்; அவர்களில், மம்தாவும் ஒருவர்.இவ்வாறு, லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.