புதுடில்லி:"மருத்துவ மாணவி, பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை டில்லியில் நடந்தால், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்காது. எனவே, வழக்கு விசாரணையை, டில்லிக்கு வெளியில், வேறு இடத்தில் நடத்த வேண்டும்' என, வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முகேஷ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளான்.டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, டில்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில், ஆறு குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு:இந்த வழக்கின் விசாரணை, டில்லி கோர்ட்டில் நடந்தால், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்காது. மீடியாக்களின் தூண்டுதல், மக்களின் கோபம், அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள், இந்த வழக்கின் மீது, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும், மத்திய அமைச்சர்களும் காட்டி வரும் ஆர்வம், ஆகியவற்றால், இந்த வழக்கின் விசாரணை, நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எங்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. டில்லியில் உள்ள கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்தால், எங்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, வழக்கின் விசாரணையை, டில்லிக்கு வெளியில், வேறு இடத்தில் உள்ள, கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.