கமுதி: ராமநாதபுரம், கமுதி எருமைகுளம் கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆளும்கட்சி பிரமுகர் தலைமையில், தாலுகா அலுவலகத்தை, கிராமத்தினர் முற்றுகையிட்டனர். கமுதி ஒன்றியம் எருமைகுளம் - எம்.புதுக்குளம் கண்மாய் கரையை பலப்படுத்த, கடந்த ஆட்சியில், 60 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. கரையின் மொத்த நீளம் 5,450 மீட்டரில், 4,500 மீட்டர் பணி நிறைவடைந்தது; "கரையை உயர்த்தினால், தங்கள் ஊருக்கு ஆபத்து ஏற்படும்' என, எருமைகுளம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து, புதுக்குளம் கிராமத்தினர், போராட்டங்களில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன், கண்மாய் கரை பலப்படுத்தும் பணி மீண்டும் துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எருமைகுளம் கிராமத்தினர், அரசு வழங்கிய இலவச பொருட்களை ரோட்டில் வீசினர்; இவை எட்டு நாட்களாகியும் கேட்பாரற்று கிடக்கின்றன. நேற்று காலை 10 மணிக்கு, எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் பெரியசாமி தலைமையில், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் குருசாமி நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதையடுத்து அலுவலகத்தில், மாலை வரை காத்திருந்தனர். கண்மாய் பணி தொடர்ந்தால், அடுத்த கட்ட போராட்டம் நடத்த தீர்மானித்து உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.