சென்னை: நாமக்கல் மாவட்ட நீதிபதி வேலு, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதியாக, வேலு பணியாற்றினார். கடந்த, 16ம் தேதி, நாமக்கல்லில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் கூட்டம் நடந்தது. இதில், நீதிபதி வேலு கலந்து கொண்டதாக, செய்தி வெளியானது. இதையடுத்து, நீதிபதி வேலுவிடம், ஐகோர்ட் பதிவுத் துறை, விளக்கம் கேட்டது. அவரும் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதி வேலுவை, சஸ்பெண்ட் செய்து, ஐகோர்ட் பதிவுத் துறை உத்தரவிட்டது. உத்தரவின் நகல், நீதிபதி வேலுவிடம் நேற்று காலை வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.