லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுடன் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன், கூட்டணி அமைக்கவும், சில கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்தும், திரைமறைவில் பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு அனுமதி விவகாரத்தில், பார்லிமென்டில் விவாதத்துடன் கொண்ட ஓட்டெடுப்பில், மத்திய அரசு வெற்றி பெற்றதால், இன்னும் ஆறு மாத காலத்திற்கு, மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில், எதிர்க் கட்சிகள் ஈடுபட வாய்ப்பு இல்லை. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும், இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில், லோக்சபா தேர்தல் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
"தே.மு.தி.க., பெயரிலேயே, தி.மு.க.,:
காங்கிரஸ், பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரஸ் அல்லது பா.ஜ., தலைமையில் அமையும் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது குறித்து, அந்த நேரத்தில் முடிவெடுக்கலாம் என, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ள, மற்ற மாநில கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள, அ.தி.மு.க., தயாராகியுள்ளது. அ.தி.மு.க.,வின் அதிகார சக்தியாக வலம் வரும், "நால்வர் குழு'வை சேர்ந்த அமைச்சர்களில் சிலர், பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் பூர்வாங்க பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளனர்.
பா.ம.க., - ம.தி.மு.க.,வுக்கு தலா, 3 தொகுதிகள், ஒதுக்கீடு செய்வதற்குரிய பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அந்த இரு கட்சிகளும், கூட்டணி அமைக்க பச்சைக் கொடி காட்டி விட்டது. ஆனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அ.தி.மு.க., அணியில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும், தலா இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க.,வுடன் நெருக்கமாகவே உள்ளது. ஆனால், சமீபத்தில், சென்னை நகரில், மாநகராட்சி சார்பில், மலிவு விலை ஓட்டல்கள் துவக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணனுக்கு என்னை பிடிக்காது' என, ஏற்கனவே, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதன் மூலம், தி.மு.க., அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேருவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
அ.தி.மு.க., அணியில் மார்க்சிஸ்ட் இடம்பெற இருப்பதால், ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து, ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை. அடுத்த மாதம், 4ம் தேதி, ம.தி.மு.க., பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. முன்னதாக, மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது குறித்த கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கவுள்ளனர். தி.மு.க., அணியில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது; புதிய வரவாக, தே.மு.தி.க.,வை நம்பியுள்ளது. காங்கிரஸ், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், போன்ற கட்சிகளுக்கும் சேர்த்து, 16 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, 24 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதற்கான பேச்சு வார்த்தையும், தி.மு.க., தரப்பில் துவக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது. தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தே.மு.தி.க., பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த அக்கட்சி திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் கூட்டணி வைப்பதற்கு அச்சாரமாக தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது. அதன் பின், மாநாடு நடத்தி, அதில் இறுதி முடிவு வெளியிடப்படும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சரியாக தான் கணித்து உள்ளீர்கள். தேசிய கட்சிகள் உடன் தான் கூட்டணி இல்லை என்று சொன்னார்கள் தவிர மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்ல வில்லை. அதே சமயத்தில் கூறுக்கு வழிக்கு சொந்தக்காரர் போடும் திட்டத்தை பாருங்கள் ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க., போட்டியிட திட்ட மிட்டு இருப்பது தனது மகள் கனி மொழியை நிறுத்த முடிவு செய்து உள்ளார் .
முன்பு திமுக ஆட்சியிலே இரண்டு மணி நேர மின் வெட்டை குறை சொல்லிட்டு ஆட்சியை பிடித்த நீங்கள் கடந்த இரு வருடமாக என்னத்தைச் செய்து கொண்டு இருந்தீர்கள்? குளு குளு கொடாவில் ஓய்வு எடுத்துக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வருகிறீர்கள். இரண்டு மணி நேர மின் வெட்டு பதினெட்டு மணி நேரமாக மாறி தமிழகமே இருளில் மூழ்கியதுதான் மிச்சம். உங்கள் ஆட்சியில் மக்கள் கடுமையாக துன்பத்தை அனுபவிக்க வைத்து விட்டீர்கள் மம்மி. இந்த இலட்சணத்தில் பிரதமர் பதவி மீது ஆசை. தமிழ்நாடு இருண்டு கிடப்பது போதாதா? இந்தியாவே இருளில் மூழ்க வேண்டுமா? செயல் திறன் அற்ற ஆளும் அதிமுக அரசுக்கு மக்கள் கடுமையான பாடம் புகட்ட இத்தேர்தல் நல்லதொரு வாய்ப்பு. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகாவது “இருக்கிறதை விட்டுவிட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படும்” பேராசையைக் கைவிட்டு தமிழகத்தின் நலனில் எஞ்சிய காலத்தை அக்கறை செலுத்த வேண்டும்.
பாமக, மதிமுக, வலது, இடது கம்யுனிஸ்டுகள் மற்றும் உள்ளத்தில் நல்ல உள்ளங்களான சரத் குமார், ஜவஹருல்லா, பார்வர்ட் ப்ளாக் கட்சிகள் ஒன்று சேர்ந்து நின்றாலே போதும், அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றுவதற்கு. திமுக, காங்கிரஸ், தேமுதிக பேப்பர் டைகர்ஸ். வேலைக்கு ஆகாது. இதில் குட்டிச்சுவரில் நிற்க போகிறவர் விஜயகாந்த் தான். அவரது ஒட்டு வங்கி கண்டிப்பாக சரியாய் துவங்கும். தேர்தலுக்கு முன் அம்மா மின் வேட்டை சரி செய்ய வேண்டும்.
அதிமுக, திமுகவை தவிர்த்து ஒரு மூன்றாவது கூட்டணி தமிழகத்தில் உருவானால் அது அதிமுகவிற்கே சாதகமாய் இருக்கும்...பிஜேபி யில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டால் ,தமிழகத்தில் உள்ள நடுநிலை வாக்களர்களில் 70 சதம் பேர் அதிமுகவுக்கே வாக்களிப்பர்..அதிமுக தனித்து புதுவை உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டாலும் 39 தொகுதிகளை கைப்பற்றும்.பிஜேபி ,காங்கிரஸ் கட்சிக்கு பிறகு அதிமுக பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ,அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும்.அப்படி ஒரு நிலைமை உருவாவதே தமிழக முநேற்றதிற்கு நல்லது..தமிழக வாக்களர்கள் நிச்சயம் அதை செய்வார்கள்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.