கொடைக்கானல்: கொடைக்கானல் நகைக்கடையில், கொள்ளையடித்த சஸ்பெண்ட் போலீஸ்காரருக்கு, போலீசார் உதவியதாக தகவல் தெரியவந்துள்ளதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் லட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடையில், இரண்டு மாதத்திற்கு முன் புகுந்த திருடர்கள், 50 பவுன் நகை, ஐந்து கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், விருதுநகர் போலீசார் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சு,35, என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கொடைக்கானல் நகைக்கடையில், விருதுநகரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் சுரேஷ்,30 தலைமையில் திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து சுரேஷை கொடைக்கானல் போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சுரேஷுக்கும், கொடைக்கானலை சேர்ந்த சில போலீசாருக்கும் தொடர்பு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. சுரேஷ் நண்பரான போலீஸ்காரர் ஒருவர் கூறிய தகவலின் பேரில்தான் சுரேஷ், ஒச்சு மேலும் இருவர் சேர்ந்து கொடைக்கானல் வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கும் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கொடைக்கானலில் மூன்று நாட்களாக தங்கி, இரவு நேரத்தில் நகைக்கடையை நோட்டமிட்டுள்ளனர். பின், கடையின் முன் கார் பஞ்சரானது போல் நள்ளிரவில் நிறுத்தி விட்டு, கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கடையை திறக்கும் சப்தம் கேட்காமல் இருப்பதற்கு அருகில் படுத்து இருந்த நாய்களை விரட்டியுள்ளனர். நாய் குரைக்கும் சப்தத்தில் கடையை உடைத்து திறந்ததாக ஒச்சுவிடம் விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் சுரேஷுக்கு தகவல் கொடுத்த கொடைக்கானல் போலீசார் யார் என்று விசாரணையை இன்ஸ்பெக்டர் பொன்ரகு நேற்று துவக்கினார். இதனால் கொடைக்கானல் போலீசார் மத்தியில் இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.