மேட்டூர்: கொளத்தூர் மலையடிவார கிராமத்தில், பாஸ்போர்ட் உடன் சந்தேகத்துக்கு இடமான நிøயில் சுற்றி திரிந்த மர்மநபரை அதிரடிப்படையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்தூர் மலையடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. மலையடிவார கிராமத்தில் மாவோயிஸ்ட், வேட்டை கும்பல் மாறு வேடத்திலும், மர்மமான முறையிலும் தங்க வாய்ப்புள்ளது. அவ்வாறு தங்கியிருந்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி மலையடிவார மக்களிடம் மேட்டூர் அதிரடிப்படையினர் கூறியிருந்தனர். நேற்று முன்தினம் பச்சபாலமலை அடிவாரத்தில் உள்ள சின்னதண்டா கிராமத்தில் பாஸ்போர்ட் உடன் மர்மநபர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டது போல சுற்றி திரிந்துள்ளார். பொதுமக்கள் விசாரித்தபோது, சரியான தகவல் கூறவில்லை. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மர்மநபர் குறித்து மேட்டூர் அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதிரடிப்படையினர் மர்மநபரை பிடித்து, கொளத்தூர் போலீஸில் ஒப்படைத்தனர். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் நடத்திய விசாரணையில், மர்மநபர் கேரளா மாநிலம், பத்தினம்திட்டா தாலுகா, எலியேரிக்கல் கிராமத்தை சேர்ந்த அஜெய்குமார், 35, என்பது தெரியவந்தது. சற்று மனநிலை பாதித்த நிலையில், தனியாக கோயில், கோயிலாக சுற்றி திரிந்த அஜெய்குமார் வழிதவறி தண்டா கிராமத்துக்கு சென்றது தெரியவந்தது. விசாரணைக்கு பின் போலீஸார், கேரளாவில் உள்ள உறவினர்களை வரவழைத்து, அவரிடம் அஜெய்குமாரை ஒப்படைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.