புதுடில்லி:டில்லியில் கால்நடை திருடர்கள் சிலருக்கும், போலீசாருக்கும் இடையே, நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில், கால்நடை திருடன் ஒருவன் கொல்லப்பட்டான்; அவன் கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.டில்லியின் புறநகர் பகுதியான, பீதாம்புராவில், கால்நடைகளை திருடும் கும்பல் ஒன்று, மினி லாரியில் உலா வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, நேற்று முன் தினம் இரவு, 2:00 மணி அளவில், அந்த மினி லாரியை, ஒரு இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால், லாரியை நிறுத்தாத அந்த கும்பல், அதிவேகத்தில் சென்றதோடு, போக்குவரத்து சிக்னல்களை மீறிச் சென்றது. உடன், போலீசார் அந்த லாரியை விரட்டிச் சென்றனர். இதைப் பார்த்த கும்பல், போலீசாரை நோக்கி, துப்பாக்கியால் சுட்டதோடு, கற்களை வீசியும் தாக்கியது.இதற்கிடையில், இது பற்றிய தகவல் கிடைத்து, வேறு இரண்டு போலீஸ் படையினரும், அந்த லாரியை வெவ்வேறு வாகனங்களில் விரட்டத் துவங்கினர். இதனால், போலீசுக்கும், அந்த கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில், கும்பல் சென்ற லாரியின் டயரை நோக்கி போலீசார் சுட்டதில், அந்த லாரி பஞ்சராகி நின்றது.இந்த சண்டையில், கால்நடை திருடர்கள் கும்பலைச் சேர்ந்த யாகூர், 20, என்பவன் பலியானான். அந்த கும்பலைச் சேர்ந்த, மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். கும்பல் சுட்டதில், போலீஸ் வேன் டிரைவரான போலீஸ்காரர் ஒருவர், தோளில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். காயமடை அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த, 15ம் தேதியும், டில்லியின் புறநகர் பகுதியில், இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அரியானா மேவாத் பகுதியைச் சேர்ந்த, கால்நடை திருடர்கள், இந்த தாக்குதலை நடத்தினர். ஆனால், அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. ஆனால், கும்பல் தாக்கியதில், போலீசார் நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.