சிதம்பரம்: கடை வாடகை வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், குமரன் தெருவைச் சேர்ந்தவர் கீரி என்கிற மூர்த்தி. இவரது மனைவி ரேவதி, 28. மூர்த்தி, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள, மூன்று தரைக்கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில் மூர்த்தி, கடந்த ஒரு மாதத்திற்கு முன், உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்து, மூர்த்திக்கு சொந்தமான கடை வாடகையை அவரது மனைவி ரேவதி, இவரின் தாய் லலிதா, 48, ஆகியோர் வசூலித்தனர்.
இதற்கு, அ.தி.மு.க., தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வத்தின் மனைவியும், மூர்த்தியின் தங்கையுமான அலுமேலு என்பவரின் மகன் தங்கமான் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 15 நாட்களாக நீடித்து வரும் இப்பிரச்னை தொடர்பாக, லலிதா, சிதம்பரம் நகர போலீசில் நேற்று புகார் அளித்தார். இதற்கிடையே, தங்கமான் உட்பட மூன்று கொண்ட கும்பல், நேற்றிரவு, லலிதா வீட்டிற்குள் புகுந்து அவரையும், மகள் ரேவதி, மகன் செந்தில், 24, ஆகியோரை கத்தியால் சரமாரியாக வெட்டியது.
இதில், பலத்த காயமடைந்த லலிதா, சம்பவ இடத்திலேயே இறந்தார். ரேவதிக்கு தலை, கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்தது. செந்திலுக்கு இடது கை துண்டானது. படுகாயமடைந்த இருவரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.