நகரி: திருமலை வெங்கடேச பெருமாள் கோவில், பொக்கிஷத்தில் உள்ள தங்க ஆபரணங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது.திருப்பதி, திருமலை வெங்கடேச பெருமாளுக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய, தங்கம் மற்றும் வைரத்திலான கிரீடங்கள் உட்பட, பல வகையான ஆபரணங்கள், கோவில் பொக்கிஷத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. புராதன கால ஆபரணங்கள் உட்பட, பல வகையான அலங்கார ஆபரணங்கள் இங்கு உள்ளன. இவற்றை ஆண்டு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம்.அதன்படி, திருமலை கோவிலின், ஆனந்த நிலையம், ராமுலவாரி மேடையில் அமைந்துள்ள பொக்கிஷத்தில் உள்ள, ஆபரணங்கள், வைகுண்டம் பார்க்கம் பகுதிக்கு, எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வு துவங்கியுள்ளது.ஆய்வின் போது, ஆபரணங்களின் தன்மை மற்றும் விபரங்களை பதிவு செய்யப்படுவதோடு, அவை சரியாக உள்ளனவா என்பதும் பரிசோதிக்கப்படும். அதன்பின், அறிக்கை தயாரிக்கப்பட்டு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு, அனுப்பி வைக்கப்படும். ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் இந்த ஆய்வுப் பணிகள், வீடியோ மூலம் படம் பிடிக்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.