சென்னை: விடுமுறை கேட்டு, 17 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய கடிதங்களின் நகல்களை வழங்க கோரி, சிண்டிகேட் வங்கி ஏஜன்ட் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வேலூரில் உள்ள, சிண்டிகேட் வங்கி கிளையில், கடன் தொகையை வசூலிக்கும், "ஏஜன்ட்' ஆக, அமிர்தகுரு என்பவர் பணியாற்றினார். விடுமுறை கேட்டு, 1995ம் ஆண்டு, விண்ணப்பித்த கடிதங்களின் நகல்களை வழங்க கோரி, தன் வழக்கறிஞர் மூலம், சென்னையில் உள்ள, துணை பொது மேலாளருக்கு, "நோட்டீஸ்' அனுப்பினார். 2011ம் ஆண்டு, அக்., மாதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த வங்கி அதிகாரி, மூன்றாம் நபரான வழக்கறிஞருக்கு, தகவல்களை அளிக்க முடியாது என, மறுத்துள்ளார். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை, அமிர்தகுரு தாக்கல் செய்துள்ளார். "ஆவணங்களில், அவர் கோரிய தகவல்கள் இல்லை. எனவே, வழங்க முடியவில்லை' என, வங்கி தரப்பில் பதிலளிக்கப்பட்டது. மத்திய தகவல் பெறும் கமிஷனும், இவ்வாறு பதிலளித்தது.
அதைத் தொடர்ந்து, விடுமுறை கோரிய, ஐந்து கடிதங்களின் நகல்களை வழங்க, சிண்டிகேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் மற்றும் வேலூர் கிளை மேலாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், அமிர்தகுரு, மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, ""ஐந்து ஆண்டுகளுக்கு, ஆவணங்களை பராமரிப்பதாக, சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது. அதில், மத்திய தகவல் பெறும் கமிஷன் திருப்தியடைந்து உள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின், தகவல்களை மனுதாரர் கோரியுள்ளார். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. மத்திய கமிஷனின் உத்தரவில் குறுக்கிட முடியாது,'' என, உத்தரவிட்டு உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.