மூணாறு:மூணாறு அருகே, வன விலங்குகளை வேட்டையாடிய கும்பலைச் சேர்ந்த இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இங்குள்ள இரண்டாம் மைல் பகுதியில் உள்ள தனியார் ஏலத்தோட்டத்தில், காட்டுப் பன்றியை வேட்டையாடி, இறைச்சியை விற்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. மூணாறு பறக்கும்படை ரேஞ்சர் ராஜன் தலைமையிலான வனக்காவலர்கள், அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனர்.
ஏலத் தோட்டத்தினுள் உள்ள வீட்டில் இருந்து காட்டுப் பன்றி இறைச்சியை கைப்பற்றினர். ஏலத்தோட்ட மேலாளர் கோட்டயம் புளிகோன் பகுதியைச் சேர்ந்த அனீஷ், 32, கட்டப்பனை அருகே சப்பாத்து ஆலடியைச் சேர்ந்த சூப்பர்வைசர் தாமஸ், 49, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, பன்றியை வேட்டையாட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, ஜீப் மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில், பன்றியை துப்பாக்கியால் சுட்ட இரண்டாம் மைல் பகுதியைச் சேர்ந்த லாலு மற்றும் விற்பனைக்காக இறைச்சியை வாங்கிச் சென்ற கல்லாறு பகுதியைச் சேர்ந்த ஆன்டோ ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி தேவிகுளம் வனச்சரகத்திற்கு உட்பட்டது என்பதால், பறக்கும் படையினர் குற்றவாளிகளை தேவிகுளம் ரேஞ்சர் அஷீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்கள், என ரேஞ்சர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.