Advertisement
"மெரினா' படச் செலவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஜன
2013
00:43

சென்னை: "மெரினா' படத்தின், வரவு, செலவு கணக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய, இயக்குனர் பாண்டிராஜுக்கு, சென்னை, சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர், பாலமுருகன். சினிமா தயாரிப்பாளர். சிவில் கோர்ட்டில், இவர் தாக்கல் செய்த மனுவில், "மெரினா படம் தயாரிப்புக்காக, லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளேன். அதன் இயக்குனர், பாண்டிராஜ். படத்தின் தயாரிப்பாளர் என, என்னை அறிவிக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.
இம்மனு, சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டது. பின், இந்த உடன்பாட்டின்படி, இயக்குனர் செயல்படவில்லை என, கோர்ட் அவமதிப்பு மனுவை, பாலமுருகன் தாக்கல் செய்தார். இவ்வழக்கில், இம்மாதம், 18ம் தேதி ஆஜராகும்படி, பாண்டிராஜுக்கு, சிவில் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, "விசாரணை, இம்மாதம், 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்று, மெரினா படத்தின், வரவு, செலவு கணக்கின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, சிவில் கோர்ட் உத்தரவிட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.