மூணாறு:கேரளா, ராஜமலையில் "வரையாடு'களின் பிரசவ காலம், முன்கூட்டியே தொடங்கியுள்ளது. மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலையில், அபூர்வ இன "வரையாடு' கள் உள்ளன. இவற்றின் பிரசவ காலங்களில் மட்டும், சுற்றுலாப் பயணிகள், அங்கு செல்ல தடை விதிக்கப்படும். தென் மேற்கு பருவ மழை தொடங்கி, ஜூலை, ஆகஸ்டில் வரையாடுகளின் இனப் பெருக்கம் செய்யும். பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை, பிரசவ காலம். பிரசவ காலம் தொடங்குவதை, ஜனவரி இறுதியில் வனத்துறையினர் காண்காணிப்பர்.
குட்டிகள் தென்படும் பட்சத்தில், உறுதி செய்யவர். அதன்பின் பூங்கா அடைக்கப்பட்டு, பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு, முன்கூட்டியே வரையாடுகள் பிரசவிக்க தொடங்கியுள்ளன. குட்டிகளின் சப்தம் கேட்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். இதுவரை, வரையாடுகள் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதாக தெரிந்துள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, சில நாட்களாக பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. குடியரசு தின விடுமுறை வர உள்ளதால், பூங்காவை வழக்கம் போல், பிப்., 1 முதல் மூட, வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.