காரைக்கால்:காரைக்காலில் தச்சு தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது.நாகை மாவட்டம் தரங்கப்பாடி கீழ்பெரும்பள்ளம் ஆசாரி தெருவைச் சேர்ந்த ஜூவானந்தம். தச்சு தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார். காமாட்சி கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமானார்.10வது மாதம் துவங்கிய நிலையில் கடந்த 17ம் தேதி வலி ஏற்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவ மனையில் பிரசவத்திற்காக @Œர்த்தனர்.
நேற்று முன்தினம் மாலை 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பெற்றார்.வயிறு பெரிதாகவும், 3 குழந்தைகள் இருந்ததால், சுகப்பிரசவத்திற்கு தாமதம் செய்தால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைகள் ஒவ்வொன்றும் தலா 2.5 கிலோ, 2.25 கிலோ மற்றும் 1.75 கிலோ எடை அளவில் உள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் தாயும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வரும் குழந்தை மற்றும் தாயை மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி உதயக்குமார், அறுவை சிகிச்சை செய்த மகப்பெறு தலைமை டாக்டர் சித்ரா, டாக்டர் கரோலின் மற்றும் குழந்தை நல டாக்டர் சோனி சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.